கடந்த
வாரம் ராமநாதபுரத்தை சேர்ந்த கேபிள் டிவி சங்கத்தலைவர் மான்மொம்பு
நாகராஜன், தன்னை கலாநிதிமாறனும், மதுரை வைகை டிவி உரிமையாளர் சரவணனும்,
மற்றும் முன்னாள் மதுரை முன்னாள் உதவி உளவுத்துறை கமிஷ்னர் ரஜினிகுமாரவேலு
ஆகியோர் மிரட்டி தனது கேபிள் டிவியை எழுதி வாங்கியதாக புகார்
கொடுத்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில்
ரஜினிகுமாரவேலுவிடம் நடத்திய விசாரணையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின என்று
கூறப்பட்டது. இதையடுத்து கலாந்திமாறன் மீது நடவடிக்கை எடுக்க சட்ட ஆலோசனை
நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இன்று திடீர் என்று
மான்கொம்பு நாகராஜன், மாரடைப்பினால் இறந்துவிட்டார். மாரடைப்பு
ஏற்படுவதற்கு வேறும் எதுவும் காரணமா என்று மதுரை அரசியல் வட்டாரத்தில்
பெரும் புயலை கிளப்பியுள்ளது.
No comments:
Post a Comment