யுஎஸ்எஸ் றொனால்ட் றீகன் என்ற விமானம்தாங்கி கப்பலும் அதனுடன் இணைந்த போர்க்கப்பல்களும் அண்மையில் பசுபிக் கடலில் இருந்து இந்து சமுத்திரப் பிராந்தியத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.
இந்த இடமாற்றத்தின் போது வழக்கமான விமானப் பறப்புகள் எந்தவொரு நாட்டினதும் கடல், வான் எல்லைக்கு அப்பாலேயே மேற்கொள்ளப்படுகிறது.
யுஎஸ்எஸ் றொனால்ட் றீகன் போர்க்கப்பலோ அல்லது அதன் விமானங்களோ சிறிலங்காவின் கடல் அல்லது வான் எல்லைக்குள் ஒருபோதும் நுழையவில்லை.“ என்று அமெரிக்கத் தூதரகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
அத்துடன் சிறிலங்கா விமானப்படை தமது வான் எல்லைக்கு வெளியே அமெரிக்கப் போர் விமானங்களை கண்காணித்திருப்பதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
அதேவேளை இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர் குறூப் கப்டன் அன்ரூ விஜேசூரிய, அமெரிக்கப் போர் விமானங்கள் சிறிலங்காவின் வான்பரப்புக்குள் நுழைந்தது உண்மையே என்று கூறியுள்ளார்.
அமெரிக்கத் தூதரகத்தின் குற்றச்சாட்டு குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், சிறிலங்காவின் எல்லைக்குட்பட்ட வான்பரப்பை மட்டுமே தாம் கண்காணிப்பதில்லை என்றும் அதற்கு அப்பாலுள்ள பகுதியையும் கண்காணிப்பதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
தமது ரேடர்களின் கண்காணிப்புத் திறன் உள்ள தொலைவு வரை தாம் கண்காணிப்போம் என்றும் சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர் கூறியுள்ளார்.
இதற்கு முன்னரும் அமெரிக்கப் போர் விமானங்கள் சிறிலங்காவின் வான்பரப்புகள் அத்துமீறினவா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.
No comments:
Post a Comment