Sunday, August 28, 2011

கிருஷ்ணசாமி வெளிநடப்பு




சென்னை, ஆக. 26: தமிழக சட்டப்பேரவையில் இருந்து, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெள்ளிக்கிழமை வெளிநடப்பு செய்தார்.  அவர் அதிமுக அணியில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  பேரவை நிகழ்ச்சி தொடங்கியதுமே, ஒரு பிரச்னை பற்றி பேச பேரவைத் தலைவர் டி. ஜெயகுமாரிடம் அனுமதி கேட்டார். பிரச்னையைப் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.  ஆனால் அதுபற்றி தமது அறையில் வந்து பேசுமாறு கூறி, கிருஷ்ணசாமியை அமருமாறு பேரவைத் 

தலைவர் கேட்டுக் கொண்டார். மேலும் கிருஷ்ணசாமி கூறிய கருத்துகள் சபைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாகவும் அவர் அறிவித்தார்.  தம்மை பேச அனுமதிக்காவிட்டால் வெளிநடப்பு செய்யப் போவதாக கிருஷ்ணசாமி கூறினார். இருந்தாலும் அவரை அமருமாறு பேரவைத் தலைவரும், அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோரும் கேட்டுக் கொண்டனர்.  தொடர்ந்து கிருஷ்ணசாமி பேச முயற்சித்துக் கொண்டே இருந்தார். அவருக்கு பேச அனுமதி கிடைக்காததால், வெளிநடப்பு செய்வதாகக் கூறி அவர் வெளியேறினார்.  பின்னர் பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, ராஜீவ்காந்தி கொலைவழக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் மூவரைக் காப்பாற்றுவது தொடர்பாக பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்த முயற்சி செய்ததாகவும், அனுமதி கிடைக்காததால் வெளிநடப்பு செய்ததாகவும் கூறினார்.
source:dinamani

No comments:

Post a Comment