முருகன் சாந்தன் பேரறிவாளன் ஆகிய மூன்று தமிழர்கள் எதிர்நோக்கியிருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கான கணப்பொழுதுகள் குறைந்துவருவதையடுத்து தமிழகமெங்கும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு மத்திய பேருந்து நிலையப் பகுதியில் மூன்று பெண் வழக்கறிஞர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்துவருகின்றனர். இவர்களை தமிழ் ஆர்வலர்களும் பொது மக்களும் சந்தித்து ஆதரவு தெரிவத்த வண்ணமுள்ளனர்.
இதைவிட தமிழகத்தின் பல மாவட்டங்களில் உண்ணாவிரதப் போராட்டங்களும் ஆர்ப்பாட்ட பேரணிகளும் போராட்டங்களும் மாணவர்களாலும் பொதுமக்களாலும் தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் மூவரின் தூக்குத் தண்டனையினை ரத்துச் செய்யக் கோரி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். முருகன் சாந்தன் பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனையினை ரத்து செய்யும்படி தமிழக ஆளுநரிற்கு பரிந்துரை செய்யக் கோரி தமிழக முதல்வரை வலியுறுத்தியே லயோலா கல்லூரி மாணவர்களால் இந்த உள்ளிருப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தஞ்சாவூர் சரபோஜி கல்லூரி மாணவர்களும் மூவரின் துக்குத் தண்டனையினை நிறுத்தக் கோரி உள்ளிருப்புப் போராட்டத்தினை நடாத்திவருகின்றனர்.
விருதாச்சலம் மாணவர்களும் இதே கோரிக்கையினை வலியுறுத்தி உள்ளிருப்புப் போராட்டதினை நடாத்திக் கொண்டிருக்கின்றனர். இதேவேளை விருதாச்சலம் பகுதியில் உள்ள வீடுகளில் கறுப்புக் கொடியினை ஏற்றி மக்களும் தமது ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளனர்.
திருச்சி மாவட்ட தொடர்வண்டி சந்திப்பு நிலையத்தில் தொடர்வண்டி மறியலில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் 50ற்கு மேற்பட்டவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதே போன்று பேரறிவாளன் சாந்தன் முருகன் ஆகிய மூவரையும் விடுதலை செய்யக்கோரி பெரியார் தத்துவமையம் மற்றும் புதியதமிழகம் இணைந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றகைப் போராட்டத்தை நடத்தினர்.
இதில் பெரியார் தத்துவமையத்தைச் சேர்ந்த புவனா உள்ளிட்ட முவர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் புவனா உள்ளிட்ட முப்பத்தைந்து பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இதனால் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூடப்பட்டுள்ளது.
கருர் மாவட்டத்தில் தொடர்வண்டி மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 50ற்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாவானியில் அனுமதியின்றி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை நீதிமன்னறத்திற்கு முன்பாக சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சட்டக்கல்லூரி மாணவர்களில் இருவர் தற்கொலை செய்யப் போவதாக கூறியுள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சிதம்பரம் அரசுக் கல்லூரி அண்ணா பல்கலைக்கழக மாணவர்களும் மூவரின் தூக்குத் தண்டனையினை வலியுறுத்தி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
நூற்றிற்கு மேற்பட்ட கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் கோவை கடவுச்சீட்டு அலுவலகத்திற்குள் சென்று ஆர்பாட்டம் நடாத்த முற்பட்ட போது அங்கு பாதுகாப்பிற்கு நின்றிருந்த காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைத்து சட்டக்கல்லூரி மாணவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து ஐம்பதிற்கு மேற்பட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் கோவை வருமானவரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்தியதில் அவர்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் கைதைக் கண்டித்து சாலைமறியல் செய்ய திட்டமிடப்பட்டுவருகின்றது.
மூவரின் தூக்குத் தண்டனையினை ரத்துச் செய்யும் அதிகாரம் தமிழக அரசிற்கு இல்லை என இன்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளதையடுத்து 150 கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மூவரின் தூக்குத் தண்டனையினை ரத்துச் செய்ய வலியுறுத்தி கோவை நீதிமன்றத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வெண்மணி உள்ளிட்ட ஏழு வழக்கறிஞர்கள் சாகும்வரை உண்ணதாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை தொடர்வண்டி நிலையத்தை முற்றுகையிட அலையலையாக புறப்பட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் அறுநூறிற்கு மேற்பட்டவர்கள் கைது. கோவை தொடர்வண்டி நிலையத்தில் குவிக்கப்பட்டிருந்த 500ற்கு அதிகமான காவல்துஇறியரது எதிர்ப்பையும் மீறி தடுப்புக்களை தகர்தெறிந்து சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறையினரின் தடுப்பையும் மீறி உள்நுழைந்த மாணவர்கள் தண்டவாளத்தின் மீது படுத்திருந்த வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டடிருந்தனர். தொடர்வண்டி பிரயாணிகளால் கழிக்கப்பட்ட மல சலங்கள் தண்டவாளத்தில் காணப்பட்ட போதும் அதன் மீது அமர்ந்து உரிமை முழக்கத்தினை எழுப்பினார்கள். பின்னர் மேலதிகமாக வரவழைக்கப்பட்ட காவல்துறையினரது உதவியுடன் 600ற்கு மேற்பட்ட சட்டக்கல்லூரி மாணவர்களை கைது செய்தனர்.
அப்பாடா என்று ஆசுவாசப்படுவதற்குள் கேரளாவில் இருந்து வந்த மங்களுர் அதிவிரைவு தொடர்வண்டிக்கு முன்பாக நூற்றிற்கு மேற்பட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் குதித்து மறியலில் ஈடுபட்டனர். இதனை சற்றும் எதிர்பாராத காவல்துறையினர் தடுமாறி பின் அவர்களையும் கைது செய்துள்ளனர்.
இதனிடையே கோவை பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு வருகின்றனர். அதனால் கோவை மாநகரம் பெரும் பதற்றத்திற்குள்ளாகியுள்ளது.

மானாமதுரை நீதிமன்னற வழக்கறிஞர்கள் இன்றுமுதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு தமிழகத்தில் என்றுமில்லாதவாறு பேரெழுச்சி ஏற்பட்டுள்ளது. சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட கல்விச் சமூகமும் வழக்கறிஞர்களும் கலைத்துறையினர் திரைத்துறையினர் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் முருகன் சாந்தன் பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனையினை ரத்துச்செய்யுமாறு மத்திய அரசை தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா வலியுறுத்த வேண்டும் என ஓங்கிக் குரல் கொடுத்து வருகின்றனர்.
நாளை ஒருநாளே சட்டப் போராட்டத்திற்கு அவகாசம் உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாளைக்கு பின்னர் தொடர்ந்து வரும் நான்கு நாட்கள் நீதிமன்ற விடுமுறை என்பதால் நாளைக்கே தடையானை வேண்டிவிட வேண்டும் என்ற முணைப்பில் சட்டவல்லுனர்கள் தயாராகி வருகின்றனர்.
இந்த அவசர நிலையினை உணர்ந்து கொண்ட நீதிபதி போல் வசந்தகுமார் மனுவை ஏற்றுக் கொண்டு நாளை விசாரணைக்கு ஏற்பதாக நம்பிக்கையளித்துள்ளார். முத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மரானி உள்ளிட்ட மூவர் இந்த வழக்கில் பங்கேற்பதற்காக இன்று சென்னை வந்துவிடுவார்கள்.
மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியின் உதவியாளர்கள் இன்று வேலூர் சிறைக்குச் சென்று முருகன் சாந்தன் பேரறிவாளன் அவர்களை சந்தித்து ஆலோசனை நடாத்தியுள்ளார்கள்.
இந்த பரபரப்புகளிற்கிடையே வேலூர் சிறை அமைந்துள்ள பகுதி நான்கு அடுக்குப் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கு காவல்கடமையில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினரிற்கு விசேட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அந்த அடையாள அட்டை இல்லாத காவல்துறையனர் எவரும் அந்தப் பகுதிக்குள் செல்லமுடியாதளவிற்கு பாதுகாப்பு இறுக்கப்பட்டுள்ளது.
தூக்குத்தண்டனை எதிர்நோக்கியிருக்கும் மூவரும் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதுடன் முழுமையான கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மல சலம் கழிப்பது என்றாள்கூட சிறைக் கண்காணிப்பாளரது முன்னிலையில்தான் மேற்கொள்ள வேண்டியளவிற்கு கடுமையான கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு மரணத்தின் நொடிப்பெழுதுகளை எதிர்நோக்கியிருக்கும் மூன்று தமிழர்களும் தமிழ் மக்களையும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களையும் மலைபோல் நம்பிக் கொண்டு இருக்கின்றனர். இதனை உணர்ந்துகொண்ட தமிழகம் போர்கோலம் பூண்டு களமாடிவருகின்றது.
தொடரட்டும் போராட்டம். வெல்லட்டும் நீதியை. ரத்துசெய்.. ரத்துசெய்.. தூக்குத் தண்டனையினை ரத்து செய்.
தமிழக அரசே... தமிழக அரசே... தாமதிக்காது தனையன்களை காத்திடு.
தமிழக முதல்வர் அவர்களே தாயுள்ளத்தோடு எம் அண்ணன்மாரை காப்பாற்றுங்கள்.
No comments:
Post a Comment