Thursday, August 11, 2011

தமிழ்நாட்டில் கோத்தபாயவின் கொடும்பாவி எரித்து போராட்டம் !


நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற பின்னர். இலங்கை இனப்படுகொலை குற்றவாளிகளை தண்டிக்கக் கோரியும் இலங்கை மீது பொருளாதாரத் தடை கோரியும் தீர்மானம் நிறைவேற்றியதோடு, தூத்துக்குடி கொழும்பு இடையேயான கப்பல் சேவை தேவையில்லை என்று பிரதமர் மன்மோகன்சிங்கிடமும் நேரடியாக கோரிக்கை விடுத்திருந்தார்.
முதல்வர் ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கைகள் இலங்கை ஆட்சியாளார்களை உஷ்ணப்படுத்தியிருக்கும் நிலையில் ஹெட்லைன்ஸ் டுடே ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த கோத்தபயராஜபக்ஸ ஜெயலலிதாவை கடுமையான தாக்கி கருத்துத் தெரிவித்திருந்தார். அரசியல் சுயலாபங்களுக்காக ஜெயலலிதா இலங்கைத் தமிழர் நலன் குறித்து பேசுவதாகவும், உண்மையிலேயே உதவுவதாக இருந்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்திருந்தார். கோத்தபயவின் இக்கருத்து அதிமுக கட்சியினரிடையே பெரும் கோபத்தை கிளறியுள்ளது. நேற்று புதுச்சேரியில் புதுவை மாநில அதிமுக சார்பில் அண்ணா சிலை அருகே கோத்தபாயவின் கொடும்பாவிக்கு செருப்பு மாலை அணிவித்து போராட்டம் நடத்தப்பட்டது. பெருமளவு தொண்டர்கள் திரண்டிருந்த நிலையில் கொடும்பாவியை எரிக்க விடாமல் பொலீசார் தடுத்தனர்.


ஆனால் அந்த கொடும்பாவி பாதி எரிந்த நிலையிலேயே அணைக்கப்பட்டது. பின்னர் இப் போராட்டம் குறித்து பேசிய புதுவை மாநில் அதிமுக செயலாளர் அன்பழகன் ' ஈழத் தமிழ் மக்களின் உயிரை மதிக்காமல் ஆயுதமேந்தாத அப்பாவி மக்களைக் கொன்று குவித்த சிங்கள வெறியன் ராஜபஸவுக்கு எதிராகவும் போர்குற்றவாளிகளுக்கு எதிராகவும் அம்மா தீர்மானம் நிறைவேற்றினார். ஆனாலும் மத்திய அரசு இன்னமும் அசைந்து கொடுக்கவில்லை. ஆனால் தமிழின விரோதிகளுக்கு டில்லியில் சிகப்புக் கம்பள வரவேற்புக் கொடுத்து வருகிறது காங்கிரஸ் கட்சி. அந்த துணிச்சலில்தான் கோத்தபாய அம்மாவுக்கு எதிராக பேசுகிறார். ஆணவத்துடன் திமிராக எங்கள் அம்மாவுக்கு எதிராகப் பேசிய கோத்தபய கும்பலைக் கண்டித்து புதுவை, தமிழகம் முழுக்க போராட்டம் முன்னெடுக்கப்படும் அம்மாவின் அனுமதியைப் பெற்று இலங்கையில் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை போராடுவோம். என்று கூறினார் அன்பழகன்.

No comments:

Post a Comment