
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் மற்றும் அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசு மீது ஐக்கிய நாடுகள் சபை பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
இலங்கையில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறலை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஈழத்தமிழர் பாதுகாப்பு பேரவை தலைவர் பழ.நெடுமாறன், எம்ஜிஆருக்கு பிறகு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்க யாரும் முன்வராத காரணத்தினால்தான் ஈழப் போராட்டம் பின்னடைவை சந்தித்தது. நியாயமாக தமிழ்நாடுதான் விடுதலைப்புலிகளின் விடுதலைப் போராட்டத்துக்கு பின்புலமாக இருக்க வேண்டும். இங்கிருந்துதான் அவர்களுக்கு எல்லா உதவிகளும் செல்ல வேண்டும். அப்படி சென்றிருந்தால் அந்த போராட்டம் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்றார்.
No comments:
Post a Comment