Sunday, September 25, 2011

அமெரிக்காவில் மகிந்தவுக்கு எதிராக வழக்கு தாக்கல் ! வழக்கு எண் : 11CIV 6634 - களத்தில் பிரதமர் வி.ருத்திரகுமாரன்

(நியூ யோர்க்)
ஐ.நாவின் வருடாந்த கூட்டத்தில் உரை நிகழ்த்த அமெரிக்காவுக்கு வருகை தந்திருக்கும் சிறிலங்கா அரசுத் தலைவர் மீது அமெரிக்க நீதிமன்றமொன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கேணல் ரமேஷின் மனைவியின் சார்பில் இந்த வழக்கினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன் அவர்கள் தாக்கல் செய்துள்ளார். நியூ யோர்க்கின் தென்மாவட்டத்திலுள்ள நீதிமன்றமொன்றில் 'வெளிநாட்டவர்க்கான குற்றங்கள் சட்ட விதிகளுக்கமைய'  தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் இலக்கம் 11CIV 6634 ஆகும்.

மகிந்த ராஜபக்சே ஸ்ரீலங்கா ஆயுதப் படைகளின் தளபதி எனும்  வகையில் கேணல் ரமேஷின்  கொலைக்கும், போர்க்குற்றங்கள், மானுடத்துக்கு எதிரான குற்றங்கள், இன அழிப்பு என்பனவற்றிற்கும் அவரே பிரதான பொறுப்பாளியாவார்.

பெரும் நெருக்கடியை இந்த வழக்கு சிறிலங்கா தரப்பு ஏற்படுத்தியுள்ளதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில் இன்று வெள்ளிக்கிழமை ஐ.நாவின் வருடாந்த கூட்டத்தில் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சே உரை நிகழ்த்துகின்றார்.

ஏற்கனவே 'தனியொரு மனிதர் ஐக்கிய அமெரிக்காவுக்கு வெளியில் மனிதப் படுகொலைக்குக் கட்டளையிட்டார், தூண்டினார், துணைபோனார் அல்லது வேறுவிதத்தில் ஈடுபட்டார் எனில் அவர் ஐக்கிய அமெரிக்காவுக்குள் நுழையத் தகுதியற்றவர் எனும் அமெரிக்க குடிவரவு சட்டவரைவினை முன்வைத்து சிறீலங்காவின் ஆட்சித்தலைவர் அமெரிக்காவுக்கு வருகை தருவதைத் தடுக்குமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமெரிக்க அரசிடம் வலியுறுத்தியிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.
நாதம் ஊடகசேவை

No comments:

Post a Comment