Tuesday, September 06, 2011

கரைச்சிப் பிரதேசத்தில் 12 ஆயிரம் பேருக்கு காணிகள் இல்லை

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேசத்தில் சுமார் 12 ஆயிரம் பேர் வரையில் காணிகள் இன்றி இருப்பதாகப் பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் காணிகள் இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகின்றது. இந்த மாவட்டத்தில் கண்டாவளை, பூநகரி, கரைச்சி, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச செயலகங்கள் உள்ளன.


கரைச்சிப் பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொண்டபோது சுமார் 12 ஆயிரம் பேர் சொந்தக் காணிகள் இன்றிக் காணிகளுக்கு விண்ணப்பித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 34ஆயிரம் பேர் சொந்தக் காணிகளில் உள்ளதுடன் மலையகத் தோட்டப் பகுதிகளில் இருந்து பல்வேறு தேவைகளுக்காக மீளக்குடியமர்ந்தவர்களும் சொந்தக் காணிகள் இன்றி கடந்த பல ஆண்டுகளாக ஏனைய விவசாயிகளின் காணிகளிலும், அரச காணிகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறு சொந்தக் காணிகள் இல்லாத நிலையில் இவர்களுக்கான வாழ்வாதார உதவிகள் கிடைப்பதிலும் பின்னடைவுகள் காணப்படுவதாகக் கரைச்சிப் பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment