Saturday, September 03, 2011

யாழ். பாடசாலைகள் துடுப்பாட்ட அணி டெல்லியில்!

யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட துடுப்பாட்ட அணி இந்தியாவின் புதுடெல்லியில் உள்ள பாடசாலை அணிகளுடன் மோதவுள்ளது.

யாழ்.மாவட்ட பாடசாலைகள் துடுப்பாட்ட அணி நாளை தொடக்கம் எதிர்வரும் 9ம் நாள் வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்கிறது.

யாழ்.மத்திய கல்லூரி, யாழ்ப்பாணக் கல்லூரி, சென்.பற்றிக்ஸ் கல்லூரி, ஜென்.ஜோன்ஸ் கல்லூரி, யாழ்.இந்துக் கல்லூரி, கொக்குவில் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் இருந்து இந்த அணிக்கான வீரர்களை யாழ்.மாவட்ட துடுப்பாட்டச் சங்கம் தெரிவு செய்துள்ளது.

சிறிலங்காவின் பாடசாலை துடுப்பாட்ட வீரர்கள் அணியொன்று இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.

செப்ரெம்பர் 6 மற்றும் 8ம் நாட்களில் புதுடெல்லி பொது பாடசாலை, மற்றும் ஆர்.கே புரம் அணி ஆகியவற்றுடன் யாழ்ப்பாண பாடசாலைகள் அணி இரண்டு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளில் விளையாடவுள்ளது.

No comments:

Post a Comment