எங்கட நாட்டில எங்களை ஒருத்தராலும் பிரிக்க முடியாது. என்னதான் நாங்கள் அடிச்சாலும், பிடிச்சாலும் நாங்கள் ஒரே குடும்பம். அந்தக் குடும்பத்திற்குள்ள நடக்குற பிரச்சினையில மூன்றாம் தரப்பினர் மூக்கை நுழைக்கக் கூடாது என்று அடிச்சுச் சொல்லிட்டுப் போயிருக்கிறாரு எங்கட ஊடகத்துறை அமைச்சர்.
யாழ். மாவட்டத்துக்கு இன்று வருகை தந்திருந்த ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல உதயன் அலுவலகத்துக்கும் வருகை தந்திருந்தார். இன்று முற்பகல் 10.30 மணியளவில் இவர் உதயனுக்கு வருகைதந்து ஆசிரிய பீடப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.
அண்மையில் இனந் தெரியாதவர்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்திருந்த செய்தி ஆசிரியர் ஞா. குகநாதனையும் சந்தித்து இவர் கலந்துரையாடினார்.
இத்துடன் கடந்த காலங்களில் இடம்பெற்ற உதயன் மீதான தாக்குதல் சம்பவங்களில் கொல்லப்பட்டவர்கள் தொடர்பான ஆவணங்களையும் அமைச்சர் பார்வையிட்டார்.
இந்த சந்திப்பில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், உதயன் பிரதம ஆசிரியர் ம.வ.கானமயில்நாதன் மற்றும் ஆசிரியர் பீடப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment