Monday, September 05, 2011

முபாரக்கும், கடாபியும் செய்ததைத்தான் மகிந்தரும் செய்கின்றார்: சரத் பொன்சேகா


எகிப்தில் முபாரக்கும், லிபியாவில் கடாபியும் மக்களுடைய சொத்துக்களைக் கையாடி எதனைச் செய்தார்களோ அதனைத்தான் இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சியாளர்களும் செய்துகொண்டிருக்கின்றார்கள் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்திருக்கின்றார்.

கொழும்பு, வெலிக்கடைச் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகா இன்று காலை மருத்துவ சகிச்சைக்காக தனியார் மருத்துவமனை ஒன்றுக்குக் கொண்டுவரப்பட்டார்.
அப்போது அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம் உரையாற்றிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனை மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்ட சரத் பொன்சேகா, "வெளிநாட்டவர்களுக்கு காணிகள் எதனையும் அரசாங்கம் இனிமேல் விற்பனை செய்யப் போவதில்லை. ஏனெனில் இப்போதே அனைத்துக் காணிகளும் வெளிநாட்டவர்களுக்கு விற்பனையாகிவிட்டது" எனத் தெரிவித்தார்.
"கொழும்பில் 100 ஏக்கர் காணி வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் 5,000 மில்லியன் ரூபா குறிப்பிட்ட சிலரால் கொமிசனாகப் பெறப்பட்டிருக்கின்றது" எனவும் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

No comments:

Post a Comment