Tuesday, September 13, 2011

பொங்குதமிழ் உரிமை முழக்கத்திற்கு உலகத்தமிழர்கள் அணிதிரள்வீர்-தமிழக தலைவர்கள் அழைப்பு (வீடியோ இணைப்பு)

தாயகத்தில் தொடரும் சிங்கள அரசின் அடக்குமுறைகளை எதிர்த்து ஐ.நா.சபை முன்றலில் முற்றுகையிடப் போகும் பொங்குதமிழ் உரிமை முழக்கத்திற்கு அனைத்து ஜரோப்பிய தமிழ் மக்களையும் அணி அணியாக திரளுமாறு தமிழக தலைவர்களும் தமிழ் உணர்வாளர்களும் அழைப்பு விடுத்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள்,திரைப்பட நடிகரும் தமிழ் உணர்வாளருமான சத்தியராஜ் அவர்கள் மற்றும் மே 17 இயக்கத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் அவர்களும் விடுத்துள்ள அழைப்பு செய்தி தற்போது இணைக்கப்பட்டுள்ளது.

இன்னும் பல தலைவர்களினதும் தமிழ் உணர்வாளர்களினதும் அழைப்பு செய்தி எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது அவை தொடர்ச்சியாக இணைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.



No comments:

Post a Comment