Monday, September 05, 2011

இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவின் குறைபாடுகளை அம்பலப்படுத்துகிறது சர்வதேச மன்னிப்புச்சபை

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் குறைபாடுகளை அம்பலப்படுத்தப்போவதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அடிப்படை முரண்பாடுகள் மற்றும் குறைபாடுகள் தொடர் பான தகவல்கள் உள்ளடங்கிய அறிக்கை ஒன்று விரைவில் வெளியிடப்படும் என்றும் சர்வதேச மன்னிப்புச்சபை அறிவித்துள்ளது.


நல்லிணக்க ஆணைக்குழுவின் குறைபாடுகள், எப்போது இவர்களுக்கு நியாயம் கிட்டும் என்ற தலைப்பில் மன்னிப்புச் சபையின் அறிக்கை வெளியிடப்படவுள்ளது.
அதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழுவிடம் சாட்சியங்களை முன்வைக்குமாறு சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமை கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச நெருக்கடிக்குழு ஆகியவற்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் அந்த அழைப்பை மூன்று அமைப்புகளும் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment