Monday, September 05, 2011

ஜெயலலிதாபோல் ஈழத்தமிழருக்கு இன்று எவரும் உதவி செய்ததில்லை - சீமான்


ஈழத்தமிழருக்கு இதுவரைக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாபோல் வேறு யாரும் உதவிகளை செய்ததில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் நேற்றிரவு மரிக்கட்டும் மரண தண்டனை என்ற தலைப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


மேலும் அவர் உரையாற்றுகையில்:-

தங்கத்தாரகை முதல்வர் அம்மாவுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். ஈழத்தமிழருக்கு இதுவரைக்கும் இவரைப்போல் வேறு யாரும் உதவிகளை செய்ததில்லை. மூன்று உயிர்களை எங்களுக்கு காப்பாற்றித்தந்துள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கிலாரிகிளிண்டன் தமிழகம் வந்திருந்தபோது ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார். அதில் 45 நிமிடங்கள் ஈழத்தமிழர்களை பற்றியே பேசிக்கொண்டிருந்தார்.

ஈழ விடிவு என்பது முதல்வர் அம்மாவின் கையில்தான் உள்ளது. இந்திராகாந்தியின் பேரன் ராஜீவ்காந்தியின் மகன் என்ற பெயரை தவிர என் தம்பி ராகுல்காந்திக்கு வேறு என்ன தகுதி இருக்கிறது. இந்தியாவின் பிரதமராக ஆசைப்படுவதற்கு.

கருணாநிதி, இந்த மூன்று உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்று அறிக்கை விடுகிறார். நீ இருக்கும்போது என்ன செய்தாய் இவர்களை காப்பாற்ற!

முத்துக்குமார் இலங்கையில் யுத்தநிறுத்தம் வேண்டி தீக்குளித்து இறந்தபோது நாங்கள் போராடியபோது, தெருவில் இறங்கி கொடி பிடித்தபோது பொலிஸாரை விட்டு எங்கள் மீது வழக்கு போட்டு எங்களை தடுத்தீர்கள்.

அன்று நீங்கள் எங்களை விட்டிருந்தால் போராட்டம் நடத்தி போரை நிறுத்தியிருப்போம். நீ எங்களை செய்யவிடவில்லை. அதனால் ஆட்சியை இழந்தாய். எங்கள் அம்மா முதல்வரானார். தோழி செங்கொடி தீக்குளித்து இறந்தார். இந்த மூன்று உயிர்களை தூக்குத்தண்டனையில் இருந்து காப்பாற்ற தெருவில் இறங்கி போராடினோம். எங்கள் மீது எந்த வழக்கையும் போடவில்லை. அதற்கு பதில் மூன்று உயிர்களை காப்பாற்றித்தந்துள்ளார். அவர்தான் தமிழினத்தின் தலைவி என்றார்

No comments:

Post a Comment