பொதுநலவாய நாடுகள் அமைப்பில்
இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று கோரி அவுஸ்திரேலிய செனட்டில்
சமர்ப்பிக்கப்பட்ட யோசனை தோற்கடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அவுஸ்திரேலிய கான்பராவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது
போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை உரிய விசாரணைகளை நடத்தவில்லை என்று குற்றம் சுமத்தி அவுஸ்திரேலிய ஆளும் கட்சியின் பங்காளிக் கட்சியான கிறீன் கட்சியின் ( நியூ சௌத்வேல்ஸ்) செனட்டர் லீ ரெஹ்னொன் யோசனை ஒன்றை சமர்ப்பித்தார்
இந்த யோசனை செனட்டில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது
இதன்போது அவுஸ்திரேலிய அரசாங்க கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து இந்த யோசனையை தோற்கடித்ததாக இலங்கை உயர்ஸ்தானிகரகம் கூறியுள்ளது
அவுஸ்திரேலியாவின் வெளிநாட்டு கொள்கையின் அடிப்படையில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வை காணமுடியாது என்று அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் சார்பில் இதன் போது வாதம் முன்வைக்கப்பட்டது
இதேவேளை எதிர்வரும் மாதத்தில் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்கவுள்ள இலங்கைப் பிரதிநிதிகளின் பெயர்களை தருமாறு ஏற்கனவே கிறீன் கட்சியின் செனட்டர் லீ ரெஹ்னொன், அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சரை கேட்டிருந்தார்
எனினும் அந்த தகவலை குடிவரவுத்துறை அமைச்சர் வழங்கவில்லை என்று இலங்கையின் கான்பரா உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது
No comments:
Post a Comment