மறுவிசாரணைக்கு அனுமதிக்காது தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட திரு.பேரறிவாளன் திரு.முருகன் திரு.சாந்தன் அவர்களுக்கு கருணை காட்டித் தூக்குத் தண்டனையிலிருந்து அவர்களை விடுவிக்குமாறு கோசங்கள் இளையோர்களால் எழுப்பப்பட்டது.
அத்தோடு யேர்மன் மொழியில் உலகில் மரணதண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்றும் அத்தோடு நடைபெறும் கவனயீர்ப்பு நிகழ்வின் தகவலும் ஒலிக்கப்பட்டது. இறுதியாக யேர்மன் ஈழத்தமிழர் மக்களவையின் சார்பில் இந்திய தூதரகத்திற்கு (அவர்கள் நேரடியாக ஏற்க மறுத்தாலும்) மனு ஒன்றும் சென்றடைய ஒழுங்கு செய்யப்பட்டது .
இதே நேரத்தில் யேர்மன் Frankfurt நகரிலும் உள்ள இந்திய தூதரக பிரதிநிதியின் காரியாலயம் முன்றலிலும் கவனயீர்ப்பு நடைபெற்றது.
அத்தோடு யேர்மன் Essen நகரிலும் பல்லின மக்களுடன் இணைந்து யுத்ததிற்கு எதிரான நாளை நினைவு படுத்தும் வேளையிலும் மரணதண்டைனைக்கு எதிரான கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது .கவனயீர்ப்பில் மக்கள் மிக உணர்வுடன் கலந்து கொண்டனர்.
இன்று மாலை தமிழினப் பெருமகள் தோழர் செங்கொடியின் ஆத்மா சாந்தியடைய யேர்மனியில் பின்வரும் முகவரியில் வணக்கநிகழ்வு தமிழ் பெண்கள் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது .
காலம் :02.09.11
நேரம் : 16.00 - 18.00 மணிக்கு
இடம் : centro sent antonia
ludwig str 9
48429 Rheine
நமது இலக்கை எட்டும் வரை வீரமங்கை செங்கொடி விட்டுச்சென்ற போராட்டத்தைத் தொடர்வோம். மரணதண்டனையை ஒழிப்போம்.
நன்றி
யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை.
நமது இலக்கை எட்டும் வரை வீரமங்கை செங்கொடி விட்டுச்சென்ற போராட்டத்தைத் தொடர்வோம். மரணதண்டனையை ஒழிப்போம்.
நன்றி
யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை.
No comments:
Post a Comment