மனித
உரிமையை விஸ்தரிப்பதும் பாதுகாப்பதும் தொடர்பில் அமைச்சரவையில்
சமர்பிக்கப்பட்ட திட்டத்துக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம்
வழங்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க
தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மாநாட்டு கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக செல்லும்போது நாம் அவரை தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், அமைச்சரவையினால் அங்கீகாரமளிக்கப்பட்டுள்ள திட்டம் தொடர்பில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மாநாட்டு கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக்கு இணங்க முன்வைக்கப்பட்ட தீர்மானத்துககே தற்போது அமைச்சரவையில் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மாநாட்டு கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, பாராளுமன்ற உறுப்பினர் சச்சின் வாஸ் குணவர்த்தன ஆகியோர் இன்று காலை ஜெனீவாக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment