Thursday, September 15, 2011

கண்பார்வையற்ற சிறுமி மீது இராணு வன்முறை: படங்கள் இணைப்பு !

மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலைக்குள் புகுந்த இனந்தெரியாத நபர் ஒருவர் கண்பார்வை இழந்த அப்பாவி தமிழ் சிறுமி மீது ஈவிரக்க மற்ற முறையில் தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் அப்பெண் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. வெள்ளிமாலை 6.00மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இரு கண்களும் பார்வையிழந்த 14 வயதுடைய வி.நளினி என்ற சிறுமி பரிதாபகரமாக காயமடைந்துள்ளார்.


இச்சிறுமி குளித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த நபர் அச்சிறுமி மீது தாக்குதல் நடத்திவிட்டுச் சென்றுள்ளார். அவருக்கு கழுத்துப்பகுதியில் ஆழமான காயம் ஏற்பட்டுள்ளதால் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார் அச் சிறுமி. மேலும் இச்சிறுமியின் கழுத்துப் பகுதி கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்டுள்ளது எனவும் அறியப்படுகிறது. இதேநேரம் வியாழக்கிழமை காலையும் இந்த பகுதியில் தனது பார்வையிழந்த மகனை குளிப்பாட்டிக்கொண்டிருந்த பெண்ணை ஒருவர் கழுத்து நெரித்தபோது அப் பெண் அம் மனிதன் மீது தாக்கவே அவர் அங்கிருந்து தப்பிச்சென்றதாகவும் தெரியவருகின்றது.

இது நிட்சயமாக அரசபடையினரின் வேலையாகதான் இருக்கும் என்றும் அவர்களை தவிர வேறு எவரும் இப்படியான ஈவிரக்கமற்ற செயல்களை செய்ய மாட்டார்கள் என்றும் மட்டக்களப்பு மக்கள் தெரிவிக்கின்றனர். ஆனல் இவ்வாறு கண்பார்வையற்ற சிறுமியை ஏன் தாக்கவேண்டும் என்ற கேள்விகளும் எழுந்துள்ளது. அரசபடைகள் அல்லது அவர்கள் ஆதவுபெற்ற கூலிப்படைகளே தொடர்ந்தும் இவ்வாற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.


No comments:

Post a Comment