Thursday, September 15, 2011

தமிழீழ விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளா? விடுதலை வீரர்களா? : நெதர்லாந்து நீதிமன்றம் தீர்மானிக்கும்


ஒப்பரேசன் கொனெக் என்ற பெயரில் நெதர்லாந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 5 இலங்கை தமிழர்கள் மீதான விசாரணை இன்று நெதர்லாந்து ஹேக் நகரில் உள்ள போர்க்குற்ற நீதிமன்றம் ஒன்றில் நடைபெறுகிறது.
இந்த நீதிமன்றம் சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றம் அல்ல. இதில் நெதர்லாந்து சட்டங்களுக்கு ஏற்பவே சட்டத்தரணிகள் வாதிடுகின்றனர்.

குறித்த 5 தமிழர்களும் இலங்கையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு நிதியுதவி செய்வதற்காக நெதர்லாந்தில் நிதிச் சேகரிப்பை மேற்கொண்டனர் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.
எனினும் பிரதிவாதிகளின் சட்டத்தரணியான விக்டர் கோப்பே, குறித்த நிதி இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காகவே அனுப்பப்பட்டது என்று வாதிட்டு வருகிறார்.
அத்துடன் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கே அந்த நிதிகள் அனுப்பப்பட்டிருந்தாலும் கூட இலங்கை அரசாங்கத்தினால் பாதிக்கப்பபட்டுள்ள மக்களின் விடுதலைக்காக போராடும் ஒரு போராளிக்குழுவுக்கே அந்த நிதிகள் அனுப்பபட்டுள்ளதாக சட்டத்தரணி கோப்பே வாதாடுகிறார்.

நெதர்லாந்து விசாரணையாளர்களின் தகவல்படி, நெதர்லாந்தில் உள்ள இலங்கை தமிழர்களின் குடும்பம் ஒன்று வருடம் ஒன்றுக்கு 2000 யூரோவை நிதியாக வழங்க வேண்டும் என்று குறித்த ஐந்து பிரதிவாதிகளும் எதிர்ப்பார்த்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச தரப்பு சட்டத்தரணிகள், தமிழீழ விடுதலைப்புலிகளின் இலங்கை படையினர் மீதான தாக்குதலுக்காகவே இந்த நிதி பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்தநிலையில் இன்று முதல் கட்ட விசாரணை நடைபெறவுள்ளது. இதனையடுத்து மூன்று வாரங்களின் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளா? அல்லது விடுதலை வீரர்களா? என்பதை தீர்மானிக்கும் என்று ரேடியோ நெதர்லாந்து தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment