Saturday, September 24, 2011

முஸ்லிம்கள் கொழும்பிலிருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள் : கோத்தபாய தெரிவிப்பு

முஸ்லிம் மக்கள் கொழும்பிலிருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு வாழ் முஸ்லிம் மக்கள் விரட்டியடிக்கப்படுவார்கள் என மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் பொய்யானவை.


முஸ்லிம் மக்கள் உள்ளிட்ட எவரும் கொழும்பிலிருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள், மாறாக நகரத்தினரும் மக்களினதும் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

கொழும்பில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன.

பத்தாயிரம் கோடி ரூபா செலவில் சேரி மக்களுக்கு 35000 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட உள்ளதுடன், இதில் ஒரு வீட்டுக்காக 30 லட்ச ரூபா செலவிடப்பட உள்ளது.

சேரி வாழ்க்கை என்ற எண்ணக்கருவினை முற்று முழுதாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment