வன்னி
யுத்தத்தின்போது இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து
பொறுப்புக்கூறும் கடைமையை நிறைவேற்றுவதற்கு பிரித்தானிய அரசாங்கம் கொழும்பு
அரசாங்கத்திற்கு காலக்கெடு விதித்துள்ளது. 2011 ஆம் ஆண்டின் இறுதிக்குள்
பொறுப்புக்கூறும் கடமையில் முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டும் என அது
மேலும் தெரிவித்துள்ளது. இல்லா விடில் சர்வதேச விசாரணைக் குழு மூலம்
கொழும்பு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கு பிரித்தானியா நடவடிக்கை
எடுக்க வேண்டி வரும் என்று பிரித்தானியாவின் வெளியுறவு அமைச்சர் வில்லியம்
ஹேக் பிரித்தானியாவின் வெளிவிவகார அலுவலகத்திற்கு அறிவித்துள்ளார்.சர்வதேச விசாரணைக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்பதில் அழுத்தம் கொடுக்க பிரித்தானியா வெளியுறவு அலுவலகம் தவறிவிட்டதாக வெளிவிவகார குழு கடுமையாக விமரிசித்துள்ளது என்றும் அத்தகவலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் வில்லியம் ஹேக் வெளிவிகார குழுவிற்கு கடந்த வாரம் கையளித்த பதிலில் போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து கொழும்பு அரசாங்கம் பொறுப்புக்கூற தவறுவது குறித்து வெளியிட்ட கவலையை தானும் பகிர்ந்து கொள்வதாக தெரிவித்திருக்கின்றார்.
No comments:
Post a Comment