நேட்டோவில் அங்கம் வகிக்கும்
துருக்கியின் கடற்படைப் போர்க்கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்துக்கு
நான்கு நாள் பயணமாக வந்துள்ளதாக சிறிலங்கா கடற்படை அறிவித்துள்ளது. துருக்கிக்கும், சிறிலங்காவுக்கும் இடையில் இராஜதந்திரத் தொடர்புகள் ஏற்பட்டு 104 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் முதல்முறையாக அந்த நாட்டுப் போர்க்கப்பல் ஒன்று கொழும்பு வந்துள்ளதாக சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுணசூரிய தெரிவித்துள்ளார்.
நேட்டோவில் அங்கம் வகிக்கும் நாடுகளில் இரண்டாவது பெரிய இராணுவத்தைக் கொண்டுள்ள துருக்கி லிபியாவில் மேற்கொள்ளப்படும் நேட்டோ படை நடவடிக்கையிலும் பங்கேற்கிறது.
இந்தநிலையில் துருக்கியக் கடற்படையின் ‘ஜெம்லிக்‘ என்ற போர்க்கப்பல் நேற்று கொழும்புத் துறைமுகத்துக்கு நான்கு நாள் பயணமாக வந்துள்ளது குறித்து சிறிலங்கா கடற்படை மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது.
இந்தப் போர்க்கப்பலில் 151 வது கூட்டு அதிரடிப் படையின் தளபதி றியர் அடிமிரல் சினான் எருக்ருல் மற்றும், 30 அதிகாரிகளும் 241 கடற்படையினரும் கொழும்பு வந்துள்ளனர்.
No comments:
Post a Comment