கிறீஸ் மனிதன்
யாழ்ப்பாணத்திற்கு வரமாட்டான் என ஜனாதிபதி மகிந்த வழங்கிய உறுதி மொழியை
அடுத்து நாளை சனிக்கிழமை நடைபெறவிருந்த உண்ணாவிரதத்தை தமிழ் கட்சிகள்
கைவிடப்பட்டுள்ளது.ஜனாதிபதியுடனான நேற்றைய சந்திப்பைத் தொடர்ந்து போராட்டத்தை நாளை நடத்துவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
நாவாந்துறை மக்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெறுவது குறித்து பரிசீலிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டமை, கிறீஸ் மனிதன் விவகாரத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டமை மற்றும் நேற்று குடாநாட்டில் பதற்றம் தணிந்திருந்தமை என்பவற்றைக் கருத்தில் கொண்டு, அரசுக்குக் கால அவகாசம் வழங்கும் வகையில் உண்ணாவிரதத்தை ஒத்தி வைப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது'' என்றார் சுமந்திரன்.
குடாநாட்டில் கிறீஸ் மனிதன் அச்சுறுத்தல் அதிகரித்து மக்கள் மத்தியில் பீதி பரவியதை அடுத்து, இதனைக் கட்டுப் படுத்த அரசு நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து நகரில் உள்ள ஆலயம் ஒன்றின் முன்பாக உண்ணாவிரதம் இருப்பது என்று கடந்த 5ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment