
இலங்கையில் இறுதிப்போர் நடைபெற்ற 2009ம் ஆண்டு எடுக்கப்பட்ட புதிய புகைப்படங்கள் தற்போது தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் பெண்களை இலங்கை அரச படைகள் கொல்லும் காட்சிகளும் மற்றும் அவர்களை மானபந்தப் படுத்துவதும் அடங்கிய புகைப்படங்கள் தற்போது தமக்கு புது ஆதாரமாகக் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இப் புகைப்படங்களில் இலங்கை அரச படைகளின் சில உயர் அதிகாரிகள் மற்றும் தளபதிகள் நேரடியாக அங்கே நிற்கும் காட்சிகள் பதிவாகியுள்ளதாகவும் சில செய்திகள் குறிப்பிடுகின்றன. இருப்பினும் இதனை ஊறுதிசெய்ய முடியவில்லை.
இப் புகைப்படங்களை தாம் அவுஸ்திரேலிய சமஷ்டிப் பொலிசாருக்கு(AFP) அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்த ஜோன் டவுன் QC அவர்கள் சில புகைப்படங்களை பிரதமர் யூலியா கிலாட் பார்பதற்காக ஏற்பாடுகளை தாம் செய்யவிருப்பதாகவும் தெரிவித்தார். பெண்களுக்கு இளைக்கப்படும் கொடுமைகளை ஒரு பெண்ணால் நன்றாக அறியமுடியும் என்ற நிலையில் இப் புகைப்படங்களை பார்வையிடவிருக்கும் அவுஸ்திரேலியப் பிரதமர் யூலியா கிலாட் அவர்கள் தனது நிலையை மாற்றிக்கொள்ளும் காலகட்டம் தோன்றலாம் எனவும் நம்பப்படுகிறது. அவுஸ்திரேலிய வெளிநாட்டமைச்சர் கெவின் ரூட் அவர்களும் இலங்கைக்கு சார்பான போக்கையே கடைப்பிடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிதாக தற்போது கிடைக்கப்பெற்றுள்ள இப் போர்குற்ற புகைப்படங்களை தாம் விரைவில் வெளியிடவுள்ளதாகவும் ஜோன் டவுன் QC மேலும் தெரிவித்துள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. அப்புகைப்படங்களை அதிர்வு வெளியிடவுள்ளது.
No comments:
Post a Comment