Thursday, January 05, 2012

இலங்கை உள்ளிட்ட 35 அகதிகளுடன் அவுஸ்திரேலியா சென்ற இந்தவருட முதலாவது படகு

அவுஸ்திரேலியாவுக்கான இந்த வருடத்தின் முதலாவது அகதிப் படகு நேற்றைய தினம் அங்கு சென்றுள்ளது.  

அவுஸ்திரேலியாவின் அஸ்மோர் தீவுக்கு அருகில் 35 பேருடன் வந்த படகு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, டிவி தீவு பகுதியில் 16 பேரை கொண்ட மற்றுமொரு படகும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
 
 
 

இந்த இரண்டு படகுகளில் வந்தவர்களும், இந்தோனேசியாவால் வீசா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் இலங்கை உள்ளிட்ட நான்கு நாடுகளுக்கான வீசா கட்டுப்பாடுகளை இந்தோனேசியா தளர்த்த தீர்மானித்ததை தொடர்ந்து, தமது நாட்டுக்கு வரும் அதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என, அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அவுஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களம், இந்தோனேசிய சட்ட மற்றும் மனித உரிமைகள் அமைச்சிடம் பேசி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை, பாகிஸ்தான், ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கான வீசா கட்டுப்பாடுகளை இந்தோனேசியா தளர்த்த தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment