Monday, January 09, 2012

தமிழரின் விடுதலை இயக்கமாக அங்கீகரித்து தென்னாபிரிக்க அரசு; தமிழ்க் கூட்டமைப்பு.!

தமிழ் மக்களின் விடுதலைக்காக உழைக்கும் இயக்கமாக தமிழ்க் கூட்டமைப்பை அங்கீகரித்து ஆபிரிக்க தேசியக் காங்கிரசின் நூற்றாண்டு விழாவுக்கு தென்னாபிரிக்கா அழைப்பை விடுத்திருந்தது என்று தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளார்.


ஆபிரிக்க தேசியக் காங்கிரசின் நூற்றாண்டு விழாவை தென்னாபிரிக்கா நேற்றுக் கொண்டாடியது. ப்ளூம்பொன்டீன் நகரில் நடந்த நூற்றாண்டு விழா நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான தென்னாபிரிக்கர்கள் கூடியிருந்தார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டனர்.

புலம்பெயர் தமிழர்கள் அங்கம் வகிக்கும் உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகளும் விழாவில் கலந்துகொண்டிருந்தனர்.
தமிழ் மக்களின் விடுதலைக்காக உழைக்கும் இயக்கமாக அங்கீகரித்து தமக்கு தென்னாபிரிக்கா இந்த அழைப்பை விடுத்திருந்தது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.

தென்னாப்பிரிக்க விடுதலைத் தலைவர் நெல்சன் மண்டேலாவின் உடல்நிலை காரணமாக அவரால் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை. நிறவெறியின் முடிவில் கட்சியை ஆட்சி அதிகாரத்தை நோக்கி கொண்டு வழிநடத்திய, 93 வயதான நெல்சன் மண்டேலா அண்மைக்காலமாக பொது நிகழ்வுகள் எதிலும் கலந்துகொள்ளவில்லை.என்பது குறிப்பிடத்தக்கது.!

No comments:

Post a Comment