இலங்கையில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தம் வகிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், ஆபிரிக்க தமிழ் காங்கிரஸிடம் கோரியுள்ளனர்.
இதேவேளை, இலங்கைத் தமிழர்களுக்கு சுயநிர்ணய ஆட்சி வழங்கப்பட வேண்டுமெனவும் அதற்கு ஆபிரிக்க நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும் வணக்கத்திற்குரிய இமெனுவல் அடிகளார் தலைமையிலான உலகத் தமிழர் பேரவை அமைப்பு கோரியுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உலகத் தமிழர் பேரவை பிரதிநிதிகளில் இருவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டும் பணிகளில் ஈடுபட்டவர்கள் என்றும் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment