தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் ஆயுதம் தூக்கி போராட்டம் நடாத்தியது சரியென சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளும் காலம் விரைவில் வரும் என கொழும்பில் வசித்துவரும் இசுலாமியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொழும்பில் முச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்த போது நண்பர் ஒருவர் தனக்கு நடந்தவற்றை எம்முடன் பகிர்ந்து கொண்டார். இப்ப நாட்டில அநியாயங்கள் அக்கிரமங்கள் கூடிப்போச்சு. கொலை கொள்ளை கற்பழிப்பு போன்ற குற்றச்செயல்கள் சர்வசாதாரணமாக நடக்குது. கொழும்பில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்த குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதால் மீண்டும் ஒரு பயங்கரமான சூழ்நிலைக்குள் இருப்பதாக தோன்றுகிறது.
யுத்தம் முடிந்து விட்டதாக கூறி சிங்கள மக்களை ஏமாற்றிய ராசபக்சே அரசு தற்போதைய நிலை தொடர அனுமதித்தால் பிரபாகரன் ஆயுதம் தூக்கிப் போராடியது சரிதான் என்ற நிலைக்கு சிங்கள மக்களும் வந்துவிடுவார்கள் என அந்த முதிய இசுலாமிய முச்சக்கர வண்டி சாரதி தெரிவித்துள்ளதாக எமது நண்பர் தொடர்ந்து தெரிவித்திருந்தார்.
No comments:
Post a Comment