Friday, January 13, 2012

சீனாவைப் போன்று கூகுள், பேஸ்புக்கிற்கு தடை விதிப்போம்: டில்லி ஐகோர்ட் எச்சரிக்கை

ஆட்சேபனைக்குரிய படங்கள் மற்றும் தகவல்கள் இடம் பெறுவதை தடுக்க, கூகுள் மற்றும் பேஸ்புக் வளைதளம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில், சீனாவில் இவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது போல, இந்தியாவிலும் தடை விதிக்கப்படும் என, டில்லி ஐகோர்ட் எச்சரித்துள்ளது.
சமூக வளைதளங்களில் ஆட்சேபணைக்குரிய படங்கள் மற்றும் தகவல்கள் இடம் பெறுகின்றன. இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என,
உத்தரவிடக்கோரி, டில்லி ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
இந்த வழக்கு நேற்று நீதிபதி சுரேஷ்கைத் முன், விசாரணைக்கு வந்த போது, அவர், "சமூக வளைதளமான பேஸ்புக், கூகுள் தேடுபோறி (சர்ச் இன்ஜின்) போன்றவை, தங்கள் வெப்சைட்களில் ஆட்சேபணைக்குரிய படங்கள் மற்றும் தகவல்கள் இடம் பெறுவதை தவிர்க்க ஒரு செயல்பாட்டு முறை ஒன்றை உருவாக்க வேண்டும்.
அப்படி இல்லையெனில், இதுபோன்ற வெப்சைட்களுக்கு சீனாவில் தடை விதிக்கப்பட்டது போல, இந்தியாவிலும் தடை விதிக்கப்படும்' என்றார்.
முன்னதாக கூகுள் இந்தியா சார்பில் ஆஜரான முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் முகுல் ரோதகி, ""வெப்சைட்களில் ஆட்சேபணைக்குரிய படங்கள், தகவல்கள், அவதூறு செய்திகள் இடம் பெறுவதை கண்காணிக்க முடியாது அல்லது அவற்றை கட்டுப்படுத்த முடியாது.
வெப்சைட்களில், உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் தங்களின் கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். கட்டுரைகளை வெளியிடுகின்றனர். அவற்றை எல்லாம் கண்காணிப்பது, ஆட்சேபனைக்குரிய தகவல்கள் இடம் பெறுவதை தடுப்பது என்பது சாதாரண விஷயமல்ல,'' என்றார்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சந்தியோக், "ஆட்சேபணைக்குரிய தகவல்கள் மற்றும் படங்கள் வெளியாவதை தடுக்க, கூகுள் இந்தியாவிடம் போதிய செயல்பாட்டு முறை உள்ளது,'' என்றார். பேஸ்புக் இதையடுத்து, வழக்கு விசாரணை வரும் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment