இந்தியன்
ஆமி அமைதிப்படை என்ற பெயரில் ஈழமண்ணில் வந்து செய்த அட்டகாசங்கள்
உலகறியும். கொலைகள், கற்பழிப்புக்கள், சித்திரவதைகள் என்று இலங்கை ஆமியை
மிஞ்சிய செயற்பாடுகளாக ஒருகாலத்தில் அவை இருந்தன.
அப்படியான காட்டுமிராண்டித்தனமான இந்தியன்
ஆமி செய்யும் சித்திரவதைகள் அடங்கிய அதிர்சிக்காணொளி ஒன்று இன்றைய தினம்
வெளியாகியுள்ளது. ஆண் ஒருவரை நிர்வாணமாக்கி அடித்து உதைக்கும் காட்சிகளே
இவை...
இந்திய பங்களாதேஷ் எல்லையில் உள்ள இராணுவ
முகாம் ஒன்றில் தான் மேற்படி கொடூர சித்திரவதைக் காட்சிகள் படம்
பிடிக்கப்பட்டுள்ளன. மாடு கடத்தல்காரர் ஒருவர் ஆமிக்கு இலஞ்சம் கொடுக்க
மறுத்ததால் தான் மேற்படி கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காட்சிகள் கிராமவாசி ஒருவரால்
தான் எடுக்கப்பட்டுள்ளது. கொடூரத் தாக்குதலுக்கு உள்ளான நபர்
இறந்துவிட்டார். குறித்த சம்பவத்தில் ஈடுபட்ட 8 இராணுவத்தினர் சேவையில்
இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகள்
தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. கடந்த 16 ஆம் திகதியே மேற்படி சம்பவம்
இடம்பெற்றுள்ளது. இந்தியன் ஆமியின் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆசிய மனித
உரிமை ஆணையம் தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment