புனர்வாழ்வளிக்கப்பட்டு
விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகின்ற முன்னாள் போராளிகளை பலரை
பயங்கரவாதத்தின் பெயரால் மீண்டும் கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளில்
சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக அறியமுடிகின்றது.சிறிலங்கா அரசாங்கத்துக்கு பயங்கரவாத நடடிவடிக்கைகளில் முன்னாள் போராளிகள் பலர் ஈடுபட்டு வருவதாக சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய சமீபத்திய நாட்களில் தொடர்சியாக தெரிவித்து வந்துள்ள நிலையில இந்தச் செய்தி வெளிவந்துள்ளது.
இதேவேளை சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் சில கட்சிகளுடன் முன்னாள் போராளிகள் பலர் தொடர்பு வைத்திருப்பதாகவும் பாதுகாப்புச் செயலர் குற்றச்சாட்டுக்களை சுமந்தியிருந்தார்.
இந்நிலையில் வடக்கு கிழக்கில் மீண்டும் பதற்ற நிலையை தோற்றுவிக்கும் நடவடிக்கைகளில் முன்னாள் பேராளிகள் ஈடுபட்டுவருவதாக சிறிலங்காவின் புலனாய்வுத்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக சிங்கள நாளேடான திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
அத்தோடு புலிகளுடன் தொடர்புடைய புலம்பெயர் தமிழர்கள் பலர் சுற்றுலாப் பயணிகள் போல், வடக்குக்கு சென்று, முன்னாள் பேராளிகளுடன் இரகசியமான பேச்சுக்களை நடத்துவதாக தெரிவித்துள்ள திவயின, வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சுயாட்சி வழங்கப்பட வேண்டும் நிலைப்பாட்டினைக் கொண்டு தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இந்த முன்னாள் போராளிகள் உதவி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இது இவ்வாறிருக்க முன்னாள் போராளிகளை வைத்து சிறிலங்கா அரசாங்கம் தெருக்கூத்தை நடத்துவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதி அரியநேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பேராளிகளை அவர்களின் உறிவினர்களிடம் ஒப்படைப்பதற்கு மாறாக தனது பிரச்சாரங்களுக்கு ஏற்ற வகையில் போராளிகள் விடுவிப்பு நிகழ்வுகளை நடாத்தி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
மட்டக்களப்பில் முன்னாள் பேராளிகளை விடுவிப்பதற்கான நிகழ்வொன்றை சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிலையிலேயே அரியநேந்திரன் அவர்கள் இந்த கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
குறித்த இந்த நிகழ்வுகளை ஒவ்வொரு இடமாக நடத்தி அதனை ஒர் தெருக்கூத்துப் போல் அரசாங்கம் நடாத்தி வருவதாக குறிப்பிட்டுள்ள அரியநேந்திரன் விடுவித்த பின்னரும் சிறிலங்காப் படைகளினால் அவர்களுக்கு விடுக்கப்படுகின்ற அச்சுறுத்தல் நெருக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment