முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தினை சிறீலங்காக்படையினர் முற்றாகஅகழந்து மாவீரர்களின் வித்துடல்கள்கொண்ட மண்ணினை காட்டுப்பகுதிக்குள்ளும் சேற்றுபகுதிகளுக்குள்ளும் வீசுகின்றார்கள்.
முல்லைத்தீவு முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்றுக் காலை தொடக்கம் சிறீலங்காப்படையினர் கனரக வாகனங்களின் உதவியுடன் நிலத்தினை அகழ்ந்து மாவீரர்களின் வித்துடல்களை அகற்றும் பணியில்ஈடுபட்டுள்ளார்கள்.
குறித்த பகுதியில் கனரக வாகனங்கள் மற்றும் 'பைக்கோ' வின் உதவியுடன் மண்ணை அகழ்ந்து வேறு பகுதிகளுக்கு ஏற்றிச் சென்றுள்ளனர்.சிறீலங்காப்படையின் சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் 59 ஆவது டிவிசன் படைப்பிரிவினை சேர்ந்த பெருமளவான படையினர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்தத் துயிலும் இல்லத்தில் கட்டப்பட்டிருந்த கல்லறைகள் ஏற்கனவே அகற்றப்பட்ட நிலையில் இப்போது படையினரால் மண்ணை அகழ்ந்து வேறு இடத்துக்கு கொண்டு செல்வது குறித்து மக்கள் மத்தியில் சந்தேகத்தையும் மனக்கிலேசத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பிட்ட அந்தப் பகுதியில் படை முகாம் ஒன்றை அமைக்கும் நோக்கத்துடனேயே மாவீரர்களின் உடல்கள் மற்றும் எச்சங்கள் அகற்றும் பணிகளை சிறீலங்காப்படையினர் ஈடுபட்டுள்ளார்கள்.தமிழர்தாயகத்தில் உள்ள அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்களும் சிங்களப்படைகளால் அழிக்கப்பட்ட நிலையில் தற்போது நிலத்தின்கீழ் உள்ள மாவீரர்களின் எலும்புக்கூடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
No comments:
Post a Comment