நாட்டுப்பற்றாளர்
வைத்திலிங்கம் பரமேஸ்வரன் அவர்களது மறைவு தமிழீழ விடுதலைப் பாதையில் ஓர்
பேரிழப்பாகும். புலம்பெயர் வாழ்விலும், தாயகத்தின் விடுதலையை உயிர்
மூச்சாகச் சுமந்து பணியாற்றிய பரமேஸ்வரன் ஒரு உதாரண தமிழீழ மகனாக
எமக்கெல்லாம் வாழ்ந்து காட்டியுள்ளார்.
தேசிய விடுதலை மீதான உறுதியும், விடுதலைப் புலிகள் மீதான நம்பிக்கையும், தேசியத் தலைவர் அவர்கள் மீதான பெருமதிப்பும் அவரது வாழ்நாள் இலட்சியமாக இருந்தது. இறுதி மூச்சுவரை அவர் தமிழீழ விடுதலைக்கான அர்ப்பணிப்போடு பணியாற்றினார். அதன் காரணமாக விடுதலைப் புலிகளால் நாட்டுப் பற்றாளர் என்ற மதிப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தேசியத் தலைவரிடமிருந்து பாராட்டுப் பெறுவதும், இறுதிப் பயணத்தில் புலிக்கொடி தாங்கிப் பயணிப்பதும் தேசியப் பற்றுள்ள ஒவ்வொரு ஈழத் தமிழனது அதி உயர் இறுதிப் பேராசையாக இருக்கும். அந்த வகையில், நாட்டுப்பற்றாளர் விடுதலைப் புலிகளது மதிப்பளித்தலுடன், புலிக்கொடி தாங்கித் தன் இறுதிப் பயணத்தை நிறைவு செய்யும் பாக்கியத்தைப் பெற்றுள்ளார்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து, இன்று நம்மையெல்லாம் கலங்க வைத்து மறைந்துவிட்ட நாட்டுப் பற்றாளர் வைத்திலிங்கம் பரமேஸ்வரன் அவர்களுக்கு பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை இறுதி வணக்கத்தைச் செலுத்துவதுடன், அவரது குடும்பத்தினரது துயரத்திலும் நாங்கள் பங்கேற்கின்றோம்.
தமிழீழ விடுதலைக்காக வாழ்ந்தவர் எவரும் மரணத்தின்மூலம் மறைந்து விடுவதில்லை. அவர்கள் எங்கள் மனங்களில் என்றென்றும் வாழ்ந்துகொண்டே இருப்பார்கள். தமிழீழ விடுதலை நோக்கிய எங்கள் ஒவ்வொரு நகர்வுக்கும் அவர்கள் எமக்குத் துணையாக நிற்பார்கள். அவர்களது கனவுகளோடு நாங்கள் முன்னேறிச் சென்று தமிழீழ மண்ணை விடுவிப்போம்!
தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்!
- தமிழீழ மக்கள் பேரவை - பிரான்சு

No comments:
Post a Comment