Monday, January 16, 2012

புலம் பெயர் தமிழ் மக்களுக்கு கனடியத் தமிழர் தேசிய அவை விடுக்கும் வேண்டுகோள்

எங்களுடைய தாயக மீட்பு வரலாற்றிலே எம் இனம் எத்தனையோ வெற்றிகளை ஈட்டி வந்த வேளைகளிலும் போராட்டத்தின் பல பின்னடைவுகளுக்கு  துரோகத்தனங்களும்; காட்டிக் கொடுப்பவர்களுமே முதன்மைக்காரணிகளாக இருந்திருக்கின்றார்கள்
எம் இனத்தின் உச்சக்கட்ட அழிவைச் சந்தித்த முள்ளிவாய்க்கால் பேரழிவிற்கும் அதன் பின்பான எம் மக்களின் இன்றைய அவல நிலைக்கும்; இதே துரோகத்தனங்களும் காட்டிக் கொடுப்புகளுமே முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.

அதிலிருந்து மீண்டு புலம் பெயர் தமிழ் மக்கள் எம்மினத்தின் விடிவிற்காய் முழு வீச்சாக புலம் பெயர் தேசத்தில் செயற்பட்டு வருகின்றார்கள்.
எம்மினத்திற்கான நீதிக்கான செயற்பாடுகளை முன்னெடுத்து அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் ஆதரவும் கனிந்து வருகின்றது. இக்காலகட்டத்தில்; மீணடும் அதே துரோகத்தனங்களுடன் சில அடிவருடிகள் புலம் பெயர் தேசங்களில் எம் இனத்தின் விடிவிற்கான செயற்பாடுகளை சிதைக்க முற்படுகின்றார்கள்.
இவ்வாறான துரோகத்தனத்தின் தொடரச்சியாக 2011 செப்டம்பர் மாதம் கனடாவில் தீபாவளித் திருநாள் கனடாவில் அமைந்துள்ள இலங்கைத்; தூதுவராலயத்துடன் இணைந்து சில எம் இனத்துரோகிகள் நடாத்திய வேளையில் எம் இனத்தின் மத குருமார் என்று சொல்லிக் கொள்ளும் சிலர் அதில் கலந்து கொண்டு இலங்கைத்  தூதுவர்களுக்கு ஆசி வழங்கி இருக்க எங்களில் சில அடிவருடிகளும் அதில் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதன் தொடர்ச்சியாக கடந்த 6. 01. 2012 வெள்ளிக்கிழமை அன்று தேசியத்தின் பெயரைக் கூறி தன் நடனப்பள்ளியை வளர்த்த நடன ஆசிரியரின் ஐந்து மாணவிகள் கூட்டாக நடாத்திய நடன அரங்கேற்றத்தில் இலங்கை தூதரக அதிகாரி பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டு அங்கு சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் உரையாற்றிச் சென்றமை புலம் பெயர் தமிழ் மக்களிடையே துரோகத்தின் உச்சக்கட்டமான ஒரு நிகழ்வாக கருதப்படுகின்றது.
இவ்வாறு தேசியத்தைக் கூறி தங்களை வளர்த்துக் கொள்கின்றவர்களை தமிழ் மக்கள் அடயாளம் கண்டு கொள்ள வேண்டும். இனி மேலும் இவ்வாறான செயற்பாடுகளை புலம் பெயர் தேசங்களில் எமது மக்கள் அனுமதிக்காது விழிப்புடன் செயற்படுமாறு கனடியத் தமிழர் தேசிய அவையானது கேட்டுக்கொள்கின்றது.
எம் தாயகத்தில் எம்மினம் இனவாத அரசினால் மிகவும் கொடுரமாக இனப் படுகொலை செய்யப்பட்டு இன்னும் ஆயிரக்கணக்கான எம் உறவுகள் சிறைகளிலும் பசி, பட்டினி, வாழ்விடம் இழந்து அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்ற வேளையில் எம்மில் சிலர் இவற்றையெல்லாம் கண்டும் காணதவர்களாக சிங்களத்தின் அடிவருடிகளாக மாறி உள்ளமை மிகவும் கவலைக்கிடமானது.
புலம் பெயர் தேசங்களில் எம்மினத்திற்கான நீதி வேண்டி நடைபெறுகின்ற செயற்பாடகளை சிதைகின்ற வகையில் இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலின் படி செயற்படுகின்ற அடிவருடிகளை இனம் கண்டு எமது புலம் பெயர் தேச உறவுகள் இவர்களுக்கான ஆதரவுகளை முற்றாக விலக்கி விழிப்புடனும் ஒற்றுமையுடன் ஒன்று பட்டு செயற்பட்டு எமது தாயக உறவுகளின் விடியலை நோக்கிய செயற்பாடுகளில் முற்று முழுதாக செயற்படுமாறு கனடியத் தமிழர் தேசிய அவை கேட்டுக்கொள்கின்றது.
கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT)
பணிமனை: 10-5310 Finch Ave, Scarborough

No comments:

Post a Comment