Thursday, January 12, 2012

நாய் வாழ்க்கை வாழும் மனிதர்கள்! அதிர்ச்சிப் படங்கள் இணைப்பு

உலகிலுள்ள செல்வந்த நகரங்களில் ஒன்று தான் ஹாங்காங். இங்கு ஏராளமான ஆடம்பர பங்களாக்களும் ஹோட்டல்களும் உள்ளன.
இப்படி இருக்கும் சீனாவின் தலைநகரின் இருண்ட பக்கமே இது. இங்கு வசிக்கும் மக்களில் ஒரு சாரார் தெரு நாய்களிலும் விட கேவலமான இழிவான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் படங்களை பிரித்தானியப் புகைப்படக்காரரான Brian Cassey என்பவரே எடுத்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இவ்வாறான துயரத்தின் மத்தியில் வாழ்ந்து வருவதாக நம்பப்படுகின்றது.
6 அடி நீளமும் 2 1 /2 அடி அகலமும் உள்ள கூண்டுகளில் இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். வழமையாக முயல் வளர்ப்பதற்கே இவ்வாறான கூடுகள் தயார் செய்யப்படுகின்றன. நேர்மையே இல்லாத நில உரிமையாளர்கள் இத்தகைய ஒரு கூண்டுக்கு கூட மாதம் 200 டொலர்கள் வரை கட்டணம் வசூலிப்பதாக தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment