வட
தமிழீழம் யாழ்ப்பாணம் பலாலி வீதியின் பல இடங்களில் நேற்று (10-01-2012)
சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படையினர் ஊர்திகளை மறித்து திடீர் சோதனைகளை
நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலாலி வீதி பரமேஸ்வராச்சந்தி, கோண்டாவில் சந்தி, மற்றும் உரும்பிராய்
சந்தி ஆகிய இடங்களின் வீதியோரங்களில் தரித்திருந்த படையினர், வீதியால்
பயணித்த ஊர்திகள் மற்றும் உர்ந்துருளிகளை மறித்து பதிவு மற்றும் சோதனை
நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதனால் மக்கள் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளானதுடன், உரிய நேரத்துக்கு தமது கடைமைகளுக்கு செல்ல முடியாது திண்டாடியதை அவதானிக்கக் கூடியதாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளானதுடன், உரிய நேரத்துக்கு தமது கடைமைகளுக்கு செல்ல முடியாது திண்டாடியதை அவதானிக்கக் கூடியதாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment