Sunday, January 15, 2012

தானே புயலினால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் அகதிகளுக்கு உதவ நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முடிவு

தமிழகத்தில் இடம்பெற்ற தானே' புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளாகியுள்ள ஈழத்தமிழ் அகதிகளுக்கு உதவிகளை வழங்க நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கான முதற்கட்ட களஆய்வினை தமிழகத்தில் உள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோழமை மேற்கொண்டுள்ளது.
கடலூருக்கு அண்மித்த குள்ளஞ்சாவடி அம்பலவாணன் பேட்டையில் உள்ள அகதிமுகாமே தானே புயலுக்கு பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
இந்த அகதிமுகாமில் உள்ள 431 ஈழத்தமிழ் அகதிகளே
பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோழமை மையம் இவர்களுக்கான உதவிகளை வழங்குவதற்குரிய முதற்கட்ட களஆய்வினை மேற்கொண்டுள்ளது.
இதேவேளை தானே புயலினால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு வழங்குகின்ற உதவிகள் தங்களுக்கும் கிட்ட தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும் என ஈழத்தமிழ் அகதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment