Monday, January 16, 2012

இலங்கையைக் கைவிடும் அரபு நாடுகள்! ஆதரவுக்காக ஆபிரிக்க நாடுகளுக்கு அலையும் பீரிஸ்!!


ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக் குழுவின் கூட்டத்தொடரில் அரபு நாடுகள் பலவும் இலங்கை அரசைக் கைவிடலாம் எனச் செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், அரசாங்கம் தற்போது ஆபிரிக்க நாடுகளின் ஆதரவை நாடிச் சென்றுள்ளது.

இதனொரு அங்கமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்­சவின் பணிப்புக்கமைய வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மேற்கு ஆபிரிக்க நாடுகளுக்கு அவசர அரசியல் சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

ஆபிரிக்காவுக்கும் இலங்கைக்கும் நீண்ட வரலாற்றுப் பாரம்பரியம் மிக்கதொரு உறவுள்ளது’ என்ற வார்த்தையுடன், செனகல் நாட்டில் முதலில் கால் பதித்த வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் அந்நாட்டு ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடியதோடு, இலங்கை அரசாங்கத்துக்கான ஆதரவைக் கோரியுள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வின் கடிதத்தையும் செனகல் நாட்டு ஜனாதிபதியிடம் பீரிஸ் கையளித்துள்ளார்.

அத்துடன், செனகல் வெளிவிவகார அமைச்சர் மற்றும் படைத்துறை அமைச்சர் ஆகியோர்களையும் சந்தித்துக் கொண்டு மேற்கு ஆபிரிக்காவின் இன்னுமொரு நாடான புர்க்கினா பாசோ ஜனாதிபதியையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்­சவின் கடிதத்தையும் அவரிடம் பீரிஸ் கையளித்துள்ளார். அத்து டன், இந்நாட்டின் வெளிவிவகார அமைச்சரையும் சந்தித்த வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், மேற்கு ஆபிரிக்காவின் இன்னுமொரு நாடான மவுரித்தோனியாவுக்கு பயணமாகியுள்ளார்.
Theevagan

No comments:

Post a Comment