தற்போது சென்னையில் நடைபெற்று வரும் "வீழ்வேன் என்று நினைத்தாயோ" என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பல தமிழ் உணர்வாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
விழாவில் ஜயா
நெடுமாறன்,தா.பாண்டியன்,நல்லகன்னு,மணிவண்ணன்,தமிழருவி மணியன்,உச்சிதனை
முகர்ந்தால் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திரைக்காவியத்தை செதுக்கிய
புகழேந்தி தங்கராஜா அவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.
தற்போது இந்த நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும் மண்டபத்திலிருந்து ஈழதேசம் தமிழக செய்தியாளர் தெரிவிக்கையில்..
விதைப்பதை விதைத்துவிட்டு அறுவடைக்காக காத்திருக்கும் முள்ளிவாய்க்கால் ஒன்ற ஓர்மத்தோடு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
நிகழ்வில் உச்சிதனை முகர்ந்தால் திரைப்பட இயக்குனர் மதிப்பிற்குரிய புகழேந்தி தங்கராஜா பேசுகையில் தமிழ் மக்களுக்கு தமிழீழம் தான் ஒரே தீர்வு அதை தீர்மானிக்கவேண்டியது இந்தியா அல்ல தமிழர்களே என்று ஆவேசப்பட்டு தனது உரையை நிகழ்த்தியுள்ளார்.
No comments:
Post a Comment