இந்திய இலங்கைக் கடற்படையினர் நேற்று முன்தினம் நடுக்கடலில் இந்தியக் கரையோரக் காவல்படைக் கப்பலில் சந்தித்துப் பேசினர்.
இரு நாடுகளின் கடற்படைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம் படுத்தும் வருடாந்தச் சந் திப்பின் ஒரு பகுதியாகவே இரு நாட்டுக் கடற்படை அதி காரிகளும் கப்பலில் சந்தித்துப் பேச்சு நடத்தினார்கள் என்று சென்னையில் உள்ள இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரு நாட்டு மீனவர்க ளது பிரச்சினை பற்றியும் கடற்படைகள் இடையே யான உறவைப் பலப்படுத்துவது பற்றியும் சந்திப்பில் ஆராயப்பட்டது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்தியக் கரையோக் காவல் படைக்கப்பலான வஜிரவில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் எல்லைச் சந்திப்புத் தொடரில் இது 20 ஆவது சந்திப்பு என்று இலங்கைக் கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தாரர். காங்கேசன்துறைக்கு வெளியே இரு நாடுகளினதும் கடல் எல்லையில் சந்திப்பு நடந்ததாகவும் அவர் கூறினார்.
எல்லைச் சந்திப்புக்களில் வழமையாக மன்னார் வளைகுடா மற்றும் பாக்கு நீரிணைப் பகுதியில் நிலவும் மீனவர் பிரச்சினைகள் குறித்தும் கடற்படை நடவடிக்கைகள் குறித்துமே வழமையாக ஆராயப்படும் என்று இலங்கைக் கடற்படைப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்கள் இன்னமும் இலங்கைச் சிறைகளில் இருக்கின்ற நிலையில், அவர்களை விடுவிக்கக்கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையறை இன்றி வேலை நிறுத்தப்போராட்டத்தில் குதிப்பதற்கு ஒருநாள் முன்னதாக இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

No comments:
Post a Comment