கிளிநொச்சி மாவட்டத்தில்
கடந்த இரண்டு வார காலமாகப் பரவிவரும் ஒரு வகைக் காய்ச்சலினால் நேற்று வரை 6
பேர் மரணமாகியுள்ளனர். இந்தக் காய்ச்சல் சகல வயதினரையும் தாக்குவதாக
வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கிளிநொச்சி உதயநகரைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை சத்தியசீலன் (வயது45) என்பவர் தொடர்ந்து இரண்டு நாள்களாக காய்ச்சலினால் அவதிப்பட்டு நேற்று மரணமானார்.
கிளிநொச்சி உதயநகரைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை சத்தியசீலன் (வயது45) என்பவர் தொடர்ந்து இரண்டு நாள்களாக காய்ச்சலினால் அவதிப்பட்டு நேற்று மரணமானார்.
இவருடன் இதுவரை 6 பேர் இந்தக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளனர். ஒருவகை சுவாச நோய்க் காய்ச்சலினால் ஏற்பட்ட உயிரிழப்பாக இருக்கலாம் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
அத்துடன் கடந்த வாரம் உயிரிழந்த 17 வயது மாணவனும் இதே காய்ச்சலினால் உயிரிழந்திருப்பதுடன், உயிரிழந்த 6 பேரின் இரத்த மாதிரிகளும் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
இரண்டு அல்லது மூன்று நாள் காய்ச்சலுடனே இந்த மரணம் நிகழ்வதால் காய்ச்சல் ஏற்பட்ட உடனேயே வைத்தியர்களை நாடுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றது.
இந்தக் காய்ச்சல் தொடர்பில் ஆராய்வதற்கென கொழும்பில் இருந்து மருத்துவ நிபுணர் குழு ஒன்று வடக்குக்கு இன்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை நேற்று மரணமான சத்தியசீலனின் உடற்கூறுகள் மருத்துவ ஆய்வுக்கென கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களில் பலர் காசநோய்க்கு இலக்காகியுள்ளதாக காசநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment