அன்பிற்குரிய உறவுகளே, கடந்த 03.01.2012
அன்று திருகோணமலை மாவட்டத்தின் விகாரை வீதியில் வைத்து பிரித்தானியாவைச்
சேர்ந்த வர்த்தகர் கந்தையா இராஜகோபால் அவர்கள் சுடப்பட்டு,ஆபத்தான நிலையில்
உயிருக்குப் போராடி வருகின்றார் என்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே. அது தொடர்பான செய்தியினைப் படிக்க விரும்பின் இங்கே கிளிக் செய்யவும். உங்கள்
நாற்று வலைப் பதிவிற்கு மின்னஞ்சல் மூலமாக அச் செய்தியுடன் தொடர்புடைய சில
தகவல்கள் ஊடக அறிக்கை வடிவில் அனுப்பப்பட்டிருக்கிறது.அதனை அப்படியே
உங்கள் பார்வைக்காக தருகின்றேன். இச் செய்தியினையும், புகைப் படங்களையும் அனைத்து ஊடகங்களிலும் நீங்கள் பிரசுரிக்கலாம்.
தமிழீழ விடுதைப் புலிகள்
புலனாய்வுப் பிரிவு
தமிழீழம்
தமிழீழம்
07 -01 -2012
எம் உயிரிலும் மேலான தமிழீழ மக்களே !
கடந்த 03 -01 -2012 அன்று திருகோணமலை மாவட்டத்தின் உவர்மலைப் பகுதியில் கந்தையா இராஜகோபால் என்னும் தனிநபர் மீதான தாக்குதலுக்கு விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறையானது உரிமை கோருகின்றது. தங்கள் முன் ஏன்? எதற்கு ? என்கின்ற வினாக்கள் எழும் என்பதை நாம் புரிந்து கொள்கிறோம்
வர்த்தகம் என்கின்ற பெயரில் எம் ஈழமண்ணிலும் ,புலம்பெயர் தேசத்திலும் காட்டிக் கொடுப்பு துரோகங்களை கட்டவிழ்த்து விடும் செயற்பாடுகளில் இவரும் இவர் சகோதரர்களும் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர் என்பதை புகைப்பட ஆதாரங்களோடு தங்களுக்கு
இத்தால் தெளிவுபடுத்துகிறோம் .
புலம்பெயர் வாழ் தமிழீழ உறவுகளே!
நீங்கள் முன்னெடுக்கும் ஈழ விடிவுக்கான செயற்பாடுகளை முடக்க உங்களைச் சூழ சதிவலை விரிக்கப்பட்டுள்ளதை கடந்த கால சம்பவங்கள் தெளிவாக்கும் என நினைக்கின்றோம். கந்தையா .இராஜகோபால் என்கின்ற நபரும் ,அவர் குடும்பத்தாரும் மற்றும் அவரோடு சேர்ந்தியங்கும் கும்பலும் பற்பல நாடுகளில் அவர்களது துரோக செயற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளனர். இராணுவ கப்டன்களை பிரித்தானியா ,தாய்லாந்து ,சுவீடன் போன்ற நாடுகளுக்கு அழைத்து வந்து தமிழீழ செயற்பாட்டாளர்களை காடிக்கொடுத்தல், ஸ்ரீலங்கா விமான நிலையத்தில் புலம்பெயர் சமூகத்தை காட்டிக்கொடுத்தல், உல்லாச விடுதி கேளிக்கை விடுதிகளில் இளையோரை சீர்குலைத்தல், தங்களுக்கு இசையாதவர்களை இராணுவத்தைக் கொண்டு சித்திரவதைக்கு உட்படுத்துதல் போன்ற ஈனச் செயல்களில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.திருமலை சீனன்குடா இராணுவ விமான நிலையத்தினுள் சிங்கள சமூகத்தையோ அல்லது சிங்கள இராணுவத்தையோ அனுமதிக்காத போது இந்த தமிழ் துரோக கும்பலை எவ்வாறு சிங்களம் அனுமதித்தது? இவர்களுக்கும் விமானப் படைக்கும் என்ன தொடர்பு? இராணுவ பிரிக்கேடியர்கள் இவர்களோடு வெளிநாடுகளிற்குச் செல்ல காரணம் என்ன ?
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் தமிழீழ பிரதேசங்கள் இருந்தபோது
இந்த துரோக கும்பல்கள் எவருமே எமது பிரதேசத்திற்கு வரவில்லை. நாம் வரவும்
அனுமதிக்கவில்லை. இந்த கும்பலின் மூத்த சகோதரர் கந்தையா . நடேசபிள்ளை
என்பவர் இந்தியாவின் றோ என்ற புலனாய்வு நிறுவனத்துக்கு புலிகளின் இலக்கு
,செயல்பாடுகள் ,ஆதரவாளர்கள் போன்ற தரவுகளை வழங்கினார் என்பதற்காக
புலிகளினால் தேடப்பட்ட போது ஈழத்திலிருந்து இந்தியாவிற்கு குடும்பத்தோடு
தஞ்சம் புகுந்தார் . இங்கு ஒரு விடயத்தை முக்கியமாக குறிப்பிட வேண்டும்.
புலிகள் தங்கள் ஆயுதங்களை முள்ளிவாய்க்காலில் மௌனித்த பின்னர் இந்த
துரோகி மீண்டும் நமது தாயகம் திரும்பி தமிழ்தேசிய கூட்டமைப்பின்
சார்பாக
தேர்தலில் குதித்துள்ளார். இது கூட தமிழ் தேசிய கூடமைப்பை கூறு போட றோ
அமைப்பின் திட்டமிடல்தான் .
தமிழ் இளைய சமுதாயமே நீங்கள் வாழும்
நாடுகளில்
இத் துரோகிகளை இனங்கண்டு இவர்களின் செயல்பாடுகளை முடக்குமாறு உங்கள்
கரம்பற்றி கேட்டுக்கொள்கிறோம். இந்த துரோகிகள் அவர்கள் செயற்பாடுகளை உடன்
நிறுத்தி தமிழீழத்திலிருந்து வெளியேற வேண்டும் எனவும் எச்சரிக்கிறோம்!
இவர்கள் மட்டுமல்ல இவர்களோடு சேர்தியங்கும் குழுவினரும் தங்கள் அடாவடித்
தனங்களை, மக்களைப் பற்றிய காட்டிக் கொடுப்புக்களைக் கைவிட வேண்டும்!
இல்லையெனில் தங்களுக்கெதிரான தாக்குதல் தொடரும்
.திருமலை போலீஸ் தலைமைச் செயலகம், கிழக்கு மாகான சபை பாதுக்காப்பு செயலகம்,
122 வது டிவிசனின் இராணுவ கட்டளை பீடம்,புகையிரத பாதுகாப்பு பிரிவுகள்
இத்தனையும்
அமைந்த உயர்பாதுகாப்பு வலயத்தின் இதயப் பகுதியில் தாக்குதல்
நடத்தக்கூடிய வகையில் புலிகளின் தாக்குதல் பலம் மீண்டும் உறுதி
செய்யப்படுகின்றது.
காலத்தின் கட்டளைக்கமைவாக ஞாலத்தில் எம் வீர வரலாறு அணைந்து விடாது, வேகமெடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை!
நன்றி
"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் "
தமிழீழ விடுதைப்புலிகள்
புலனாய்வுத்துறை
க. ராகுலன்
தமிழீழம்.
"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் "
தமிழீழ விடுதைப்புலிகள்
புலனாய்வுத்துறை
க. ராகுலன்
தமிழீழம்.
ஸ்ரீலங்காப் படைத் துறைப்
புலனாய்வாளர்களுடனும், உயரதிகாரிகளுடனும், நெருங்கிய தொடர்புகளை பேணிய
கந்தையா இராஜகோபாலின் உண்மை முகத்தினை உலகிற்கு உணர்த்தும் ஆதாரப்
புகைப்படங்கள்.
இலங்கையின் விமான நிலையத்தில் புலம் பெயர் செயற்பாட்டாளர்களையும், மக்களையும் எதிர்பார்த்து காட்டி கொடுப்பு நடவடிக்கைக்காக காத்திருத்தல். |
No comments:
Post a Comment