Chennai, India: The Dravida Munnetra Kazhagam (DMK) has convened a meeting of its highest policy-making committee on February 3, leading to widespread speculation that party president M Karunanidhi’s daughter Kanimozhi, who was recently released on bail after being incarcerated for her alleged role in the 2G spectrum sale scam, could see herself elevated within the party structure.
One of the major indications that such a development could be in store came when Kanimozhi turned 44 last week and the party’s literary and cultural wing that she heads organised a public celebration for the first time, though she was not present.
தி.மு.க.-வில் கனிமொழிக்கு மீண்டும் ஒருமுறை கேரட் காண்பிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 3-ம் தேதி கூட்டப்படும் தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கனிமொழிக்கு கட்சிப் பதவி ஒன்று வழங்கப்படும் என்ற உத்தரவாதம் கொடுக்கப்பட்டிருப்பதாக தி.மு.க. உள்வட்டத் தகவல் உள்ளது.“இம்முறை விடுவதில்லை” என்று தி.மு.க.-வில் முடிவு எடுக்கும் குழுவில் ஒருவரான ராசாத்தி அம்மாளும் உறுதியாக உள்ளார் என்று கூறப்படுகிறது.
தி.மு.க.-வில் முடிவு எடுக்கும் குழு இரு பிரிவுகளாக கோபாலபுரத்திலும், சி.ஐ.டி. காலனியிலும்
இயங்கினாலும், சி.ஐ.டி. காலனியில் எடுக்கப்படும் முடிவுகள் அந்த வீட்டு வாயில் தாண்டியவுடனேயே காற்றோடு போய்விடுகின்றது என்ற கோபம் சி.ஐ.டி. காலனியில் உள்ளது. கடந்த காலங்களில் சி.ஐ.டி. காலனியில் ஒப்புக் கொள்ளப்பட்ட பல நடவடிக்கைகள் கோபாலபுர அழுத்தம் காரணமாக நிறைவேற்றப்படவில்லை என்பதை தி.மு.க. உள்வட்டத்தில் பலரும் ஒப்புக் கொள்கிறார்கள்.
கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்து முதல் தடவையாக சென்னைக்கு வந்தபோது, அவருக்கு கட்சிப் பதவி வழங்கப்பட வேண்டும் என்று ராசாத்தி அம்மாள் போர்க்கொடி தூக்கியிருந்தார். அப்போது அவரைச் சமாதானம் செய்வதற்காக, “நானே எப்படி முடிவு எடுப்பது? பொதுக் குழு, செயற்குழுவை கூட்டித்தானே முடிவு எடுக்க வேண்டும்” என்று கலைஞரால் சொல்லப்பட்டது என்று சொல்கிறார்கள்.
அப்போதைக்கு சமாதானம் செய்வதற்காக அப்படிச் சொல்லப்பட்டதா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால், அப்போது அப்படிச் சொன்னபின் எப்போதாவது பொதுக்குழுவைக் கூட்டித்தானே ஆக வேண்டும்? அதைத் தாமதிக்க முயற்சிகள் செய்யப்பட்டதாக தி.மு.க.-வில் சொல்கிறார்கள். ஆனால், இதற்குமேலும் தாமதித்தால் நிலைமை மோசமாகும் என்ற சிக்னல் சி.ஐ.டி. காலனியில் இருந்து கடந்த வாரம் வந்துவிட்டது.
கனிமொழியின் பிறந்தநாள் கொண்டாட்ட விழாவில் ராசாத்தி அம்மாள் மைக் பிடித்து, “குடும்பத்தினரைக் காப்பாற்றவே கனிமொழி செய்யாத குற்றத்துக்காக ஜெயிலுக்குப் போனார்” என்று வெளிப்படையாகவே பேசிவிட்டார். (சுவாரசியமான அந்தப் பேச்சுக்கு இங்கே கிளிக் செய்யவும்)
இதுதான் கோபாலபுரத்துக்கு கொடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.
இனியும் கனிமொழிக்கு பதவி கொடுக்காவிட்டால், குடும்பத்தில் எந்த உறுப்பினரைக் காப்பாற்ற கனிமொழி பழியை ஏற்றார் என்பதை ராசாத்தி அம்மாள் சொல்ல மாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.
சுருக்கமாகச் சொன்னால், கனிமொழி பிறந்தநாள் விழா பேச்சுடன் மனோகரா படத்துக்கு வசனம் எழுதியவருக்கு ராசாத்தி அம்மாள் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார்- “மவனே மனோகரா.. மறுபடியும் மைக் எடுக்க எவ்வளவு நேரமாகும்?”
இம்முறை சி.ஐ.டி. காலனியின் கைகளில் சிலம்பு உள்ளதால், பிப்ரவரி 3-ம் தேதி சிலப்பதிகாரம் சிறப்பாக நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு சி.ஐ.டி. காலனி ஆதரவாளர்களிடையே உள்ளது.
No comments:
Post a Comment