Saturday, January 07, 2012

ஆசிய, பசுபிக் பிராந்தியத்தில் பலப்படுகிறது அமெரிக்கப் படை


news இந்தியாவுடனான சிறப்பான உறவுகளுடன் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகளின் பிரசன்னம் வலுப்படுத்தப்படும். இதன் மூலம் புதிய உலக ஒழுங்குக்கிணங்க அமெரிக்காவின் தலைமைத்துவம் மேலும் அதிகரிக்கப்படும் எனப் புதிய பாதுகாப்பு தந்திரோபாய ஆவணம் குறிப்பிடுகிறது என்று அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இராணுவம் சிறியதாக இருந்தாலும் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அதன் பிரசன்னம் வலிமை படைத்ததாக அமையும். மாறுதலடையும் உலகில் அமெரிக்கத் தலைமைத்துவத்தைப் பலப்படுத்த இது எங்களின் திரட்சியான அணுகுமுறையாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


எங்களின் திரட்சியான அணுகுமுறையில் புதிய வழி காட்டல் ஆபத்துக்கான ஆதாரப் பொருளை ஆராய்வதை அடிப்படையாகக் கொண்டிருக்கும். எதிர்வரும் வருடங்களில் எங்களை வழிநடத்துவதற்கும், எமது பொறுப்புகளை ஏற்பதற்கும் தேவையான தகுதிகளையும், உறவுகளையும் இத்திட்டம் பெருக்கிக் கொள்ள உதவும் என்றும் அவர் விவரித்துள்ளார்.

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் கருத்துச் செலுத்தும் அதேவேளை, நிரந்தரமான சாசுவதமான உலக பிரசன்னத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். இது அமெரிக்க யுத்த தந்திரரோபாய முன்னுரிமைகளையும் ஊக்குவிப்பதாக இருக்கும் என்றும் ஹிலாரி கிளிண்டன் விளக்கியுள்ளார்.

எங்கள் விரோதிகளைத் தடுப்பதற்கும், எங்கள் பாதுகாப்புக் கடமைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும், யுத்த தந்திரோபாய நடவடிக்கைகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

வன்முறைகளில் ஈடுபடும் தீவிரவாதிகளுடன் போரிடுவதற்கும், உலகமெங்கும் மனித கௌரவத்தைப் பாதுகாப்பதற்கும், மிரட்டல்களை உடனடியாக முறியடிப்பதற்கான எங்கள் தகுதியை பேணுவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். இதன் பொருட்டு, நேட்டோ உட்பட நலிவடைந்துள்ள நேச அணிகள், உறவுகொண்டுள்ள நாடுகள் ஆகியவற்றிற்காகவும் முதலீடுகள் செய்யப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பென்டகனில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இப்புதிய பாதுகாப்புத் தந்திரோபாய ஆவணத்தை வெளிப்படுத்திய பின்னர் ஹிலாரி கிளிண்டன் இது தொடர்பான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.

ஹிலாரி கிளிண்டன் தொடர்ந்து பேசுகையில்,  இந்த தந்திரோபாயத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் அமெரிக்கா, அதன் நேச அணிகள், பங்குதார உறுப்புகள் ஆகியவற்றுடன், அவற்றின் பங்களிப்புகள், புதிய வாய்ப்புகளை எட்டுவதற்கான வழிமுறைகள், உலக ஸ்திரப்பாட்டைக் கட்டியெழுப்புவதற்கான வழிமுறைகள் ஆகியவை தொடர்பாக தொடர்ந்து ஆலோசனை நடத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

21ஆம் நூற்றாண்டுக்கான பாதுகாப்பு முன்னுரிமைகள் ஆவணம், புதிய யுத்த தந்திரோபாய வழிகாட்டல்களைக் கொண்டது. இது அமெரிக்காவின் 21ஆம் நூற்றாண்டின் பாதுகாப்புத் தேவைகள், எதிர்கால தலைமைத்துவத்துக்கான பாதுகாப்பு ஆகியவற்றைப் பிரதிபலிக்கின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எமக்குரிய சவால்களுக்கு முகங்கொடுப்பது இராணுவத்தின் பணிமட்டும் அல்ல. இராஜதந்திரமும், அபிவிருத்தியும் இதில் சமத்துவமாகப் பாதுகாப்பில் ஒன்றிணைந்தவை. எமது அதிகார அணுகுமுறை மூலமாக வெளிநாடுகளில் அமெரிக்கர்களின் நலன்களையும், பெறுமானங்களையும் ஊக்குவிக்கவேண்டும். எமது பொருளாதார சுபீட்சத்தைக் கட்டியெழுப்பவேண்டும். எமது தேசிய பாதுகாப்பை காக்கவேண்டும் என்றும் ஹிலாரி கிளிண்டன் கேட்டுக்கொண்டுள்ளார்.
Source:udaiyan

No comments:

Post a Comment