இலங்கையின்
வெளிநாட்டு அமைச்சு பிறநாடுகளில் உள்ள தமது தூதரங்களுக்கு அவசர
சுட்டறிக்கை ஒன்றை அனுப்பிவைத்துள்ளதாக அறியப்படுகிறது. புலிகள் சின்னங்கள்
அடங்கிய முத்திரைகள் வெளியிடப்பட்டது தொடர்பாகவும் மற்றும் புலிகளை முன்
நிறுத்தி அதற்காக வேலைசெய்யும் சில தமிழ் அமைப்புகளை நன்கு அவதானிக்குமாறு
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். புலிகளின் முத்திரைகள் பிரான்ஸ் மற்றும்
பிரித்தானியாவில் வெளியிடப்பட்ட நேரத்தில் இந் நாடுகளில் உள்ள இலங்கைத்
தூதரகங்கள் மெளனம் காத்ததாக இலங்கை வெளிநாட்டு அமைச்சு அவர்களை கடுமையாகச்
சாடியுள்ளது. இதேவேளை கடந்தகாலங்களில் புலிகளுக்குச் சார்பாக இயங்கும் சில
தமிழ் அமைப்புகளை இவர்கள் அவதானிக்கத் தவறியும் உள்ளனர் எனக்
குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதனை அடுத்து கொழும்பில் இருந்து அவசர சுட்டறிக்கை ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டுள்ளதாம். அது நேரடியாக பல நாடுகளில் உள்ள இலங்கைத் தூதுவராலயங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் விடுதலைப் புலிகள் தொடர்பாகவும் அவர்களை முன் நிறுத்திச் செயல்படும் அமைப்புகளை அவதானித்து தமக்கு தகவல்களைத் தெரிவிக்கவேண்டும் என நேரடி உத்தரவு போட்டுள்ளது இலங்கையின் வெளிவிவகார அமைச்சு. இந்த உத்தரவானது கடுமையான தொணியில் அமைந்துள்ளதாக மேலும் அறியப்படுகிறது.

No comments:
Post a Comment