Tuesday, February 21, 2012

டென்மார்க் - மாலதி கிண்ணம் உள்ளரங்க உதைபந்தாட்டப்போட்டி 2012 பிப் 20, 2012

டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூடத்தினால் மாலதி கிண்ணம் உள்ளரங்க உதைபந்தாட்டப் போட்டி 6வது ஆண்டாக sunds நகரத்தில் 18ம் நாள் மாசி மாதம் நடாத்தப்பட்டது.

இப்போட்டியில் சுமார் 30 அணிகள் கலந்து கொண்டு போட்டியிட்டன. மாலதி தமிழ்க் கலைக்கூடத்தில் கல்வி கற்ற பழைய மாணவர்களும் இப்போட்டியில் இணைந்து கொண்டனர்.

பெற்றோர்களும், பார்வையாளர்களும் கைகளைத் தட்டி போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர். போட்டிகள் அடுத்தடுத்து விறுப்பாக நடைபெற்றன.

2002 வயதிற்கு உள்பட்ட அணிகளில்
3ம் இடம் - skjern மாலதிதமிழ்க்கலைக்கூடம்
2ம் இடம் -Herning மாலதிதமிழ்க்கலைக்கூடம்
1ம் இடம் - Grindsted மாலதிதமிழ்க்கலைக்கூடம்
இப்பிரிவில் சிறந்த உதைபந்தாட்ட வீரனாக டிலன் ஜெயசீலன் (Grindsted) கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டார்.

2000 வயதிற்கு உள்பட்ட அணிகளில்
3ம் இடம் - Vejle மாலதிதமிழ்க்கலைக்கூடம்
2ம் இடம் - Grindsted மாலதிதமிழ்க்கலைக்கூடம்
1ம் இடம் - Herning மாலதிதமிழ்க்கலைக்கூடம்
இப்பிரிவில் சிறந்த உதைபந்தாட்ட வீரனாக சாருகன் சிவநாதன் (Grindsted) கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டார்.

1998 வயதிற்கு உள்பட்ட அணிகளில்
3ம் இடம் - Hobro மாலதிதமிழ்க்கலைக்கூடம்
2ம் இடம் - Grindsted மாலதிதமிழ்க்கலைக்கூடம்
1ம் இடம் - Herning மாலதிதமிழ்க்கலைக்கூடம்
இப்பிரிவில் சிறந்த உதைபந்தாட்ட வீரனாக நிசான் முரளீதரன் (Herning) கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டார்.

1995 வயதிற்கு உள்பட்ட அணிகளில்
3ம் இடம் - Skjern மாலதிதமிழ்க்கலைக்கூடம்
2ம் இடம் - Grindsted மாலதிதமிழ்க்கலைக்கூடம்
1ம் இடம் - Struer மாலதிதமிழ்க்கலைக்கூடம்
இப்பிரிவில் சிறந்த உதைபந்தாட்ட வீரனாக சந்தோஸ் சிவானந்தம் (Grindsted) கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டார்.

1992 வயதிற்கு உள்பட்ட அணிகளில்
3ம் இடம் - Struer மாலதிதமிழ்க்கலைக்கூடம்
2ம் இடம் - Skjern மாலதிதமிழ்க்கலைக்கூடம்
1ம் இடம் - Middelfart மாலதிதமிழ்க்கலைக்கூடம்
இப்பிரிவில் சிறந்த உதைபந்தாட்ட வீரனாக ஜனுசன் ஈஸ்வரன் (Skjern) கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டார்.


பெண்கள் அணிகளில்
3ம் இடம் - Skjern மாலதிதமிழ்க்கலைக்கூடம்
2ம் இடம் - Vejen மாலதிதமிழ்க்கலைக்கூடம்
1ம் இடம் - Herning மாலதிதமிழ்க்கலைக்கூடம்
இப்பிரிவில் சிறந்த உதைபந்தாட்ட வீராங்கனையாக சியானி சிறீதரன் (Herning) கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டார்.

போட்டியில் பங்கு பற்றிய அணிகள் பதக்கங்களையும், வெற்றி பெற்ற அணிகள் வெற்றிக்கிண்ணங்களையும் பெற்றுக் கொண்டனர்.

































































































No comments:

Post a Comment