Saturday, February 18, 2012

ஐ.நா தலைமையிலான போர்க்குற்ற விசாரணைக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு!


நான்காம் கட்ட ஈழப்போரில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாக ஐக்கிய நாடுகளின் விசாரணை ஆணையம் ஒன்று நிறுவப்படுவதை வலியுறுத்தி ஐரோப்பிய நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.


பன்னாட்டு போர்க்குற்ற விசாரணைக்கான அழைப்பை ஐரோப்பிய ஒன்றியம் விடுக்கக்கூடும் என்ற தகவலை கடந்த புதன்கிழமை வெளியிட்டிருந்த நிலையில், இத்தீர்மானத்தை மறுநாள் வியாழக்கிழமை (16.02.2012) அன்று ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் நிறைவேற்றியிருக்கின்றது.


இத்தீர்மானத்தை முறியடிப்பதற்கு சிறீலங்கா அரசாங்கத்தின் ஆதரவு அணியை சேர்ந்த வலதுசாரி ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் முற்பட்டிருந்த பொழுதும் அவர்களின் எதிர்ப்புக்களை மீறி பன்னாட்டு விசாரணைக்கான தீர்மானத்தை இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிறைவேற்றியுள்ளனர்.

No comments:

Post a Comment