Wednesday, February 15, 2012

ஐ.நா. செயலகம் முன் தமிழர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி!




இலங்கையில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக தனது மூன்று மகள் மகன் மற்றும் மனைவியுடன் தாய்லாந்து சென்ற Kaevanumtam தேவகுமார், (37வயது) என்ற இலங்கைத் தமிழர் ஒருவர் அமெரிக்காவுக்கு செல்வதற்கு (UNHCR அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார் .ஆனால் அவரது அகதி தஞ்ச விண்ணப்ப கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவர் மீளவும் இலங்கைக்கு நாடுகடத்தப்படவிருந்த நிலையில் திடிரென நேற்று மீள (UNHCR அலுவலகம் சென்ற அவர் கையில் வைத்திருந்த எரிபொருளை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்துள்ளார்.

இருந்தும் அவர் காப்பாற்றப்பட்டுள்ளார் . 

தாய்லாந்தில் தங்கி இருக்கும் விசா காலாவதியான நிலையிலேயே இவர் இந்த தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது 

(UNHCRஅலுவலகம் முன் சென்று அவர்களுக்கு மிரட்டல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இவர் தன்னை தற்கொலை செய்ய முயன்றுள்ளார் என அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.

தேவகுமார் ஆபத்தான நிலையில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இவர் தீக்குளிப்பதற்கு சில மணித்துளிகள் முன்னர் இவருக்கான வதிவிட அனுமதி வழங்கப்படும் என உறுதி கூறப்பட்டதாக அந்த நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment