Wednesday, February 15, 2012

தமிழீழ அரசாங்கத்தின் சுயாதீன சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் கைநூல்!


ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரினை இலக்காக கொண்டு, ஈழத் தமிழினத்தின் மீதான இனவழிப்பை மூடிமறைக்கும் சிங்கள ஆட்சியாளர்களது சர்வதேச பரப்புரைகளை முறியடிக்கும் நோக்கிலான கைநூல் ஒன்று, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வெளியிடப்படுகின்றது.

சிறிலங்கா அரச படைகளினால் ஈழத் தமிழனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட போர்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை ஆகியவற்றுக்கான சுயாதீன சர்வதேச விசாரணைக்கான பொறிமுறையினை வலியுறுத்தும் நோக்கில் இந்த கைநூல் உருவாக்கப்பட்டுள்ளது.

இரத்தம் படிந்த சிங்களத்தின் உண்மை முகத்தை, சர்வதேசத்துக்கு அம்பலப்படுத்தும் இந்த பிரச்சாரச் கைநூலானது, ஆங்கில மொழியில் வெளிவருகின்றது.

சிறிலங்காவின் மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றங்களுக்கு எதிரான சர்வதேச விசாரணை ஏன் அவசியம் வலியுறுத்தும், மனித உரிமைச் சர்வதேசச் சட்ட நிபுணர்களால் வரையப்பட்ட விளக்கங்கள், வாதங்கள், ஆதாரங்கள், கட்டுரைகள் அடங்கிய கைநூலாக இது அமைகின்றது.

சர்வதேச ஊடகவியலாளர்கள், அரசுகள், அரசியல்வாதிகள் இராசதந்திரிகள், பொது அமைப்புகள் அனைத்திடமும் கையளிக்கவும், ஆவணப்படுத்தவும் வேண்டிய கைநூலாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புக்கள், செயற்பாட்டாளர்கள் அனைவரும், சர்வதேச பரப்புரைக்கான கைநூலாக இதனை பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment