ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19வது கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தை முறியடிப்பதற்கு ஆதரவு கோரி லத்தீன் அமெரிக்க மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கு அமைச்சர்கள் மட்டக் குழுக்களை சிறிலங்கா அரசாங்கம் அனுப்பியிருந்தது.
எனினும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தவிர, ஏனைய அமைச்சர்களால் இந்த முயற்சியில் அவ்வளவாக வெற்றி பெறமுடியவில்லை என்று கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.
லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு அனுப்பப்பட்ட சிறிலங்காவின் அமைச்சர்கள், அந்த நாடுகளின் பிரதி அமைச்சர் நிலைக்கு மேலுள்ள எவரையும் சந்திக்க முடியாமல் திரும்பி வந்துள்ளனர்.
அத்துடன் பொறுப்புக்கூறும் விவகாரத்தில் ஐ.நாவுடன் இணைந்து பணியாற்றுமாறு லத்தீன் அமெரிக்க நாடுகள் சிறிலங்காவிடம் கூறியுள்ளதாகவும் கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அதேவேளை, ஜெனிவா கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை ஐரோப்பிய ஒன்றியம் அல்லது பதிலி நாடு ஒன்றே அமெரிக்காவின் பின்புல ஆதரவுடன் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment